இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்னும் சில தினங்களில் நடைபெற உள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடாத ரோகித் சர்மா இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்று இருக்கிறார்.
இந்த சூழ்நிலையில் இந்திய முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் அவரது பேட்டிங் வரிசை குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
இந்தியா ஆஸ்திரேலியா இரண்டாவது டெஸ்ட் போட்டி
ஆஸ்திரேலியாவில் இந்திய கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் செய்து ஐந்து டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடி வரும் நிலையில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்னும் நான்கு டெஸ்ட் போட்டிகள் மீதம் இருக்கும் நிலையில் குழந்தை பிறந்த காரணத்தால் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடாத ரோஹித் சர்மா இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்காக மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்று இருக்கிறார்.
இந்த சூழ்நிலையில் ரோஹித் சர்மா தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கி விளையாடி வரும் நிலையில் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் கேஎல் ராகுல் மற்றும் ஜெய்ஸ்வால் கூட்டணி சிறப்பாக விளையாடியது. இந்த சூழ்நிலையில் ரோஹித் சர்மா தொடக்க ஜோடியை மாற்றாமல் அவர் ஆறாம் இடத்திற்கு வருவது நல்லது என்று கருத்துக்கள் எழுந்து வரும் நிலையில் இது குறித்து ஹர்பஜன் சிங் ரோகித் சர்மா டாப் நான்கு இடங்களுக்குள் வரவேண்டும் என்று கூறி இருக்கிறார்.
இதுகுறித்து ஹர்பஜன் சிங் விரிவாக கூறும்போது “ரோஹித் சர்மா ஐந்தாவது அல்லது ஆறாவது இடத்திற்கு பேட்டிங் செய்ய வருவார் என்று நான் நினைக்கவில்லை. ஒன்று அவர் ஜெய்ஸ்வாலோடு தொடக்க வீரராக களம் இறங்குவார் அல்லது கேஎல் ராகுல் மூன்றாவது வரிசைக்கு மாற்றப்படுவார். இல்லை எனில் ரோஹித் சர்மா மூன்றாவது வரிசைக்கு பிறகு பேட்டிங் செய்ய வருவார். ரோஹித் சர்மா ஆறாவது இடத்தில் களமிறங்கி விளையாடுவது இந்திய அணியின் நலனுக்கு சரியாக இருக்காது.
இதையும் படிங்க:ஆஸியில் படைக்க போகும் சம்பவம்.. பிராட்மேனின் சாதனை முறியடிக்க கோலிக்கு காத்திருக்கும் பொன்னான வாய்ப்பு
பேட்டிங் வரிசையை பொறுத்தவரை முதல் நான்கு வீரர்கள் முக்கிய தூண்களாக இருக்க வேண்டும். மேலும் ரோகித் சர்மா போன்ற ஒருவர் டாப் ஆர்டரில் பெரிய தாக்கம் ஏற்படுத்த முடியாது. எனவே ரோஹித் சர்மா அந்த நான்கு இடங்களுக்குள் களமிறங்க வேண்டியது அவசியம்” என்று ஹர்பஜன் சிங் கூறியிருக்கிறார். ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி பகல் இரவு ஆட்டமாக நடைபெற உள்ளதால் இந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.






