ஆஸியில் படைக்க போகும் சம்பவம்.. பிராட்மேனின் சாதனை முறியடிக்க கோலிக்கு காத்திருக்கும் பொன்னான வாய்ப்பு

0
141

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடும் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ள நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி பகல் இரவு ஆட்டமாக நடைபெற உள்ளது.

இந்த சூழ்நிலையில் கிரிக்கெட்டின் ஜாம்பவான் வீரராக கருதப்படும் டான் பிராட் மேனின் சாதனையை முறியடிக்க தற்போதைய இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலிக்கு ஒரு பொன்னான வாய்ப்பு காத்திருக்கிறது.

- Advertisement -

இந்தியா ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்

இந்திய கிரிக்கெட் வீரரான விராட் கோலி டெஸ்ட், ஒரு நாள் மற்றும் டி20 என மூன்று வடிவ தொடர்களிலும் இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடி இருக்கிறார். சமீபத்தில் இந்திய அணி டி20 உலக கோப்பையை வென்ற பிறகு விராட் கோலி டி20 வடிவத்தில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடர்களில் விளையாடி வருகிறார்.

இதில் 2011ம் ஆண்டு முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடி வரும் விராட் கோலி ஆஸ்திரேலியாவில் சிறப்பான சாதனையை வைத்திருக்கிறார். ஆஸ்திரேலிய மண்ணில் இதுவரை 43 போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி இதுவரை 10 சதங்கள் அடித்திருக்கிறார். சச்சின் டெண்டுல்கர் இலங்கை அணிக்கு எதிராக 9 சதங்கள் அடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

விராட் கோலிக்கு காத்திருக்கும் பொன்னான வாய்ப்பு

இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியா ஜாம்பவான் கிரிக்கெட் வீரரான பிராட்மேன் 1930ஆம் ஆண்டு முதல் 1948ஆம் ஆண்டு வரை இங்கிலாந்தில் 19 டெஸ்ட் போட்டிகள் விளையாடி 11 சதங்கள் அடித்து இருக்கும் நிலையில் வெளிநாட்டில் ஒரு வீரர் ஒரு அணிக்கு எதிராக அதிக சதங்கள் குவித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். இந்த நிலையில் விராட் கோலி அடுத்து அடிலெய்டு மைதானத்தில் நடைபெற உள்ள பகல் இரவு ஆட்டத்தில் சதம் அடிப்பதன் மூலமாக பிராட் மேனின் சாதனையை சமன் செய்வார்.

இதையும் படிங்க:ரோஹித் அவரை தொந்தரவு செய்யாதீங்க.. இந்த ஒரு விஷயம் தியாகம் பண்ணுங்க – இந்திய முன்னாள் தேர்வாளர் பேட்டி

எனவே அடுத்த போட்டியில் விராட் கோலி இந்த மகத்தான சாதனையை படைப்பார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது. நியூசிலாந்து அணிக்கு எதிராக மூன்று டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி மோசமாக விளையாடிய நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து தன் மீதான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். எனவே அடுத்த போட்டியில் மற்றொரு சதம் அடித்து சிறப்பான சாதனை படைப்பார் என்று எதிர்பார்க்கலாம்.

- Advertisement -