இந்திய அணியை மீண்டும் அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் வைத்து 36 ரன்னுக்கு ஆல் அவுட் செய்கின்ற எண்ணத்தில் ஆஸ்திரேலியா அணி செல்லாது என அந்த அணியின் வீரர் அலெக்ஸ் கேரி கூறியிருக்கிறார்.
இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி பகல் இரவு டெஸ்ட் போட்டியாக அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் டிசம்பர் 6ஆம் தேதி வருகின்ற வெள்ளிக்கிழமை நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணிக்கு மோசமான சம்பவம்
2020-21 ஆண்டில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு கிரிக்கெட் டெஸ்ட் சுற்றுப்பயணம் செய்திருந்தது. இந்த சுற்றுப்பயணத்தில் அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 244 ரன்கள் எடுத்தது. ஆனால் ஆஸ்திரேலியா அணி 191 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதனால் முன்னிலை பெற்ற இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸை உற்சாகமாக விளையாட சென்றது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத விதமாக அணியில் ஒரு வீரர் கூட இரட்டை இலக்கத்தை தொடாமல் இந்திய அணி 36 ரன்னில் ஆல் அவுட் ஆகியது. ஆஸ்திரேலிய அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஹேசில்வுட் 5, கம்மின்ஸ் 4 விக்கெட் கைப்பற்றினார்கள். இந்த தோல்வி இந்திய கிரிக்கெட்டில் மிக மோசமானதாக அமைந்திருக்கிறது.
36 ரன்னுக்கு ஆல் அவுட் செய்ய நினைக்க மாட்டோம்
இதுகுறித்து ஆஸ்திரேலியா அணியின் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் அலெக்ஸ் கேரி கூறும் பொழுது ” இந்திய அணியை மீண்டும் 36 ரன்களுக்கு ஆல் அவுட் செய்யும் முடிவில் ஆஸ்திரேலிய அணி அடுத்த போட்டியில் அடிலெய்ட் ஓவல் மைதானத்தில்களம் இறங்காது. ஆனால் எங்களுக்கு என்று ஒரு திட்டம் இருக்கிறது. என்ன நடந்தாலும் அந்த திட்டத்தை நாங்கள் செயல்படுத்த முயற்சி செய்வோம்”
இதையும் படிங்க : 66 பந்து 130 ரன்.. சூரியகுமார் ஷிவம் துபே ருத்ர தாண்டவம்.. மும்பை அபார வெற்றி.. 2024 சையத் முஸ்டாக் அலி
“நாங்கள் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக உற்சாகமாக காத்துக் கொண்டிருக்கிறோம். மேலும் பகல் இரவு டெஸ்டில் பின் பந்தில் நாங்கள் இதுவரையில் பெற்றிருக்கும் வெற்றி வரலாற்றின் மீது மிகுந்த நம்பிக்கையை வைத்திருக்கிறோம். எனவே நாங்கள் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெல்வோம்” என்று கூறியிருக்கிறார்.