ரோகித் இப்படி பண்ணுவார்னு எதிர்பார்க்கல.. ஆனா விமர்சிக்க முடியல.. சாம்சனைதான் எல்லோரும் நினைச்சோம் – ஹர்பஜன் சிங் பேட்டி

0
9
Harbhajan

ஐசிசி ஒன்பதாவது டி20 உலகக்கோப்பை தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி முதல் சுற்று தாண்டி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்று இருக்கிறது. இந்த நிலையில் ஹர்பஜன் சிங் ரோகித் சர்மா மற்றும் இந்திய அணி நிர்வாகம் எடுத்த ஒரு முக்கியமான முடிவு குறித்து பாராட்டி பேசி இருக்கிறார்.

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன்கள் சஞ்சு சாம்சன் மற்றும் ரிஷப் பண்ட் இருவரும் மிகச் சிறப்பாக விளையாடியிருந்தார்கள். இதன் காரணமாக இவர்கள் இருவருமே டி20 உலகக் கோப்பை இந்திய அணிக்கு தேர்வானார்கள்.

- Advertisement -

இதில் சஞ்சு சாம்சன் தன்னுடைய ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக நடந்து முடிந்த ஐபிஎல் சீசனில் 500 ரன்களை தாண்டி இருந்தார். மேலும் தனது அணியை பிளே ஆப் சுற்றுக்கும் அழைத்துச் சென்றார். எனவே இந்திய பிளேயிங் லெவனின் சஞ்சு சாம்சன் விளையாட வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் கேப்டன் ரோஹித் சர்மா ஐபிஎல் தொடரில் ரிஷப் பண்ட் செயல்பட்ட விதத்தை பார்த்து, அவரை பேட்டிங் வரிசையில் மூன்றாவது வீரராக கொண்டு வந்தார். அவரது இந்த முடிவு இந்திய அணிக்கு நல்ல தாக்கத்தை தற்பொழுது உருவாக்கி இருக்கிறது.

இது குறித்து பேசி இருக்கும் ஹர்பஜன் சிங் கூறும் பொழுது “பேட்டிங் வரிசையில் மூன்றாவது இடத்திற்கு ரிஷப் பண்ட் கொண்டுவரப்பட்டதும் அவருடைய ரோல் முற்றிலும் மாற்றப்பட்டுவிட்டது. ஐபிஎல் தொடரில் சஞ்சு சாம்சன் நிறைய ரன்கள் குறித்த காரணத்தினால் அவர்தான் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக இருப்பார் என்று எல்லோரும் நினைத்தோம்.ஆனால் ரிஷப் பண்ட்டை பேட்டிகள் மூன்றாவது இடத்திற்கு கொண்டு வந்தது மிகவும் பாசிட்டிவானது. மேலும் இந்த இடத்தில் வருவதால் உடனடியாக ரைட் லெப்ட் காம்பினேஷனும் கிடைக்கிறது.

- Advertisement -

இதையும் படிங்க : ஆஸி தெ.ஆ இல்லை.. இந்த 4 அணிகள்தான் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.. பாக் முன்னாள் வீரர் கணிப்பு

ஹர்திக் பாண்டியா விக்கெட்டுகளை எடுப்பது மிகவும் பாசிட்டிவான ஒன்று. அவர் நான்காவது பந்துவீச்சாளராக வந்தார். ஆனால் அவர் கைப்பற்றி இருக்கும் விக்கெட் எண்ணிக்கை, நாம் அவரிடம் இருந்து எதிர்பார்க்காத ஒன்றாக இருக்கிறது” என்று கூறி இருக்கிறார்