ஒன்பதாவது டி20 உலக கோப்பையில் தற்போது லீக் போட்டிகள் ஏறக்குறைய நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸ் மைதானங்களில் சூப்பர் 8 போட்டிகள் நடைபெற உள்ளன.
இதில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான ரஷீத் லத்தீப் அரை இறுதிக்கு இவைதான் தகுதி பெறும் என்று நான்கு உத்தேச அணிகளை தேர்வு செய்துள்ளார். அதில் ஆச்சரியம் அளிக்கும் விதமாக ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் இல்லை.
டி20 உலக கோப்பையில் இந்த முறை சில அதிசயமான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. குரூப் ஏ பிரிவில் இடம் பெற்றிருந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளில் இந்த இரண்டு அணிகளுமே அடுத்த சுற்று தகுதி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதில் பாகிஸ்தான் அணி கற்றுக் குட்டி அடியான அமெரிக்க அணியிடம் தோல்வி அடைந்தது மட்டுமல்லாமல், இந்திய அணியிடமும் தோல்வியடைந்து அடுத்த சுற்றுக்கு முன்னேறாமல் வெளியேறியது.
இதில் ஆச்சரியமாக அமெரிக்க அணி தனது முதல் உலகக் கோப்பையில் தகுதி பெற்றாலும், ஆச்சரியம் அளிக்கும் விதமாக அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. மேலும் சர்வதேச கிரிக்கெட்டில் முன்னணி அணிகளாக விளங்கும் நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளும் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறி இருக்கிறது. இதில் அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, வங்கதேசம், தென்னாபிரிக்கா, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.
இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான ரசீத் லத்தீப் சூப்பர் 8 சுற்றுக்கு அடுத்ததாக அரை இறுதி போட்டியில் இந்தியா, ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்து ஆகிய நான்கு அணிகள் தகுதி பெறும் என்று தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். இதில் ஆச்சரியம் அளிக்கும் விஷயம் என்னவென்றால் சர்வதேச கிரிக்கெட்டில் முன்னணி அணிகளான ஆஸ்திரேலிய மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் இடம்பெறவில்லை.
மாறாக வளர்ந்து வரும் அணியான ஆப்கானிஸ்தான் மற்றும் முன்னாள் சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடம் பெற்றுள்ளன. ஆப்கானிஸ்தான் அணி இந்த உலகக் கோப்பை தொடரில் சிறப்பாக செயல்பட்டு வந்திருக்கிறது. இந்த உலகக் கோப்பை தொடரில் முன்னணி அணிகளை வீழ்த்தியுள்ள ஆப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி பெறும் என்று கணித்துள்ளார்.
இதையும் படிங்க:பாகிஸ்தான பாருங்க ஈஸியானத கஷ்டமாக்கற வித்தையை கத்துக்கோங்க.. கோழைக்குதான் சாதாரணம் – நவ்ஜோத் சிங் சித்து விமர்சனம்
அதேபோல முன்னாள் சாம்பியன் ஆன வெஸ்ட் இண்டீஸ் தனது சொந்த மண்ணில் டி20 உலக கோப்பை நடைபெறுவதால் கோப்பையை வெல்ல அந்த அணிக்கும் அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கருதப்படுகிறது. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் முன்னணி அணிகளாக இடம் பெற்றுள்ளன.
Your semi finalists ?
— Rashid Latif | 🇵🇰 (@iRashidLatif68) June 17, 2024
My
England
West Indies
India
Afghanistan #T20WorldCup