நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக சிஎஸ்கே அணி தோல்வி அடைந்ததற்கு தான் தோனியை குறை சொல்ல மாட்டேன் என ஹர்பஜன் சிங் கூறியிருக்கிறார். அதற்கான காரணங்கள் குறித்தும் விளக்கி இருக்கிறான்.
இந்த போட்டியில் கடைசி இரண்டு ஓவர்களுக்கு 39 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் களத்தில் சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள் தோனி மற்றும் ஜடேஜா இருவரும் இருந்தார்கள். அனுபவம் வாய்ந்த இவர்கள் வழக்கம் போல் இந்த இலக்கை எட்டி அணியை வெற்றி பெற வைத்து விடுவார்கள் என்று சிஎஸ்கே ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தார்கள். ஆனால் இறுதியில் இருவராலும் இந்த இலக்கை எட்ட முடியவில்லை. இதில் தோனி ஆட்டம் இழந்து விட்டார்.
சேவாக் தெரிவித்திருந்த கருத்து
இது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் பேசி இருந்த பொழுது எல்லா நாட்களிலும் இரண்டு ஓவர்களுக்கு 40 ரன்கள் வெற்றிகரமாக அடித்து விட முடியாது என்று கூறியிருந்தார். எனவே முன்கூட்டியே தேவையான ரண்களை எடுப்பதற்கு முனைப்பு காட்ட வேண்டும் என்கின்ற வகையில் அவர் பேசியிருந்தார். இத்துடன் சிஎஸ்கே அணி 180 ரன்களுக்கு மேல் துரத்தி ஐந்து வருடங்களுக்கு மேலாகிவிட்டது என்று அவர் கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்த போட்டியில் 18வது ஓவரை சுழல் பந்துவீச்சாளர் தீக்ஷனா வீசினார். இந்த ஓவரை அடிப்பதற்கு தோனி மற்றும் ஜடேஜா இருவரும் எந்தவிதமான பெரிய முயற்சிகளையும் செய்யவில்லை. கடைசி இரண்டு ஓவர்களில் பார்த்துக் கொள்ளலாம் என்பதாகவே இருந்தார்கள். ஆனால் அவர்களால் கடைசி இரண்டு ஓவர்களில் 39 ரன்களை வெற்றிகரமாக எடுக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தோனியை குறை சொல்ல மாட்டேன்
இது குறித்து பேசி இருக்கும் ஹர்பஜன் சிங் கூறும் பொழுது “இந்த போட்டியில் சிஎஸ்கே அணி தோல்வி அடைந்ததற்கு நாம் தோனியை குறை சொல்ல முடியாது. எல்லா பெருமையும் ராஜஸ்தான் பவுலர்களுக்கு போய் சேரும். கடந்த காலங்களில் தோனி மற்றும் ஜடேஜா இருவரும் இப்படியான சூழ்நிலையில் இருந்து அணியை வெற்றி பெற வைத்திருக்கிறார்கள். ஆனால் இந்த முறை அவர்களால் அதை செய்ய முடியவில்லை. மேலும் சிஎஸ்கே அணியிடம் இண்டெண்ட்டை பார்க்க முடியவில்லை. மேலும் தோனியின் சிறந்தது இன்னும் பின்தங்கி இருக்கிறது. அவரது நிலைத்தன்மை கேள்விக்குறியாக இருக்கிறது”
இதையும் படிங்க : ருதுராஜை விட.. ரியான் பராக் கேப்டன்சில அசத்தறாரு.. அவருக்கு இத செய்யணும் – சுரேஷ் ரெய்னா பேச்சு
“ஜடேஜா போன்ற அந்தஸ்துள்ள ஒரு வீரரால் வேலையை தமது அணிக்காக சரியாக செய்து முடிக்க முடியவில்லை. நேற்றைய போட்டியில் இறுதிக்கட்டத்தில் ஜடேஜா மற்றும் தோனி இருந்த காரணத்தினால் பந்துவீச்சாளர்கள் தங்களது வேலையை செய்வதற்கு எந்தவித சிரமமும் இல்லாமல் போய்விட்டது” என்று கூறி இருக்கிறார்