ருதுராஜை விட.. ரியான் பராக் கேப்டன்சில அசத்தறாரு.. அவருக்கு இத செய்யணும் – சுரேஷ் ரெய்னா பேச்சு

0
19
Raina

நேற்று சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் ரியான் பராக்கும் மிகச் சிறப்பான முறையில் செயல்பட்டு வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார் என சுரேஷ் ரெய்னா பாராட்டி இருக்கிறார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தனது முதல் இரு போட்டிகளில் தோல்வி அடைந்து விமர்சனங்களை சந்தித்து வந்தது. கேப்டன் சஞ்சு சாம்சன் விரலில் அடிபட்டுள்ள காரணத்தினால் முதல் மூன்று போட்டிகளுக்கு கேப்டனாக இருக்க மாட்டார் என்பதால் ரியான் பராக் கேப்டன் பொறுப்பை வகுத்து வருகிறார்.

- Advertisement -

ஆட்டத்தை மாற்றிய ரியான் பராக்

நேற்றைய போட்டியில் பவர் பிளேவில் ராஜஸ்தான் ராயல்ஸ் வேகப்பந்துவீச்சாளர்கள் 6 அவர்களை வீசி முடித்திருந்தார்கள். மேற்கொண்டு அவர்களுக்கு ஆறு ஓவர் மட்டுமே வேகப் பந்துவீச்சாளர்களிடம் இருந்தது. மேலும் 8 ஓவர்கள் சுழல் பந்துவீச்சாளர்கள் வீச வேண்டி இருந்தது. இந்த நேரத்தில் சுழல் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக மிகச்சிறப்பாக விளையாடும் சிவம் துபே களத்தில் இருந்தார். இரண்டு சிக்ஸர்களையும் அடித்திருந்தார்.

இந்த நிலையில் ஹஸரங்கா பந்துவீச்சில் அவர் அடித்த பந்தை கேப்டன் ரியான் பராக் கவர் திசையில் மிக அருமையாக பிடித்து அவுட் ஆக்கினார். இது போட்டியை மாற்றிய தருணமாக அமைந்தது. மேலும் தோனி மற்றும் ஜடேஜா இருவரும் சுழல் பந்து வீச்சில் பெரிய அளவில் ரன்கள் எடுக்க மாட்டார்கள் என்று, அவர்களுக்காகவே தீக்சனாவின் ஒரு ஓவரை வைத்து இறுதியில் கொண்டு வந்தார். இதுவும் நல்ல முறையில் பலன் கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ரியான் பராக் கலக்கிட்டார்

இது குறித்து பாராட்டி இருக்கும் சுரேஷ் ரெய்னா பேசும் பொழுது ” நேற்று ரியான் பராக் கேப்டன்சி செய்த காரணத்திற்காகவே அவருக்கு ஆட்டநாயகன் விருது கொடுக்க வேண்டும். ஒரு கேப்டனாக களத்தில் சிறப்பான முடிவுகள் எடுத்து அற்புதமாக செயல்பட்டார். இதற்காகவே அவருக்கு ஆட்டநாயகன் விருதை கொடுக்கலாம்” என்று கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க : சிஎஸ்கேல இதை பார்க்க வேதனையா இருக்கு.. இந்த மாதிரி முன்ன இருந்ததே இல்ல – அம்பதி ராயுடு வருத்தம்

மேலும் சுரேஷ் ரெய்னாவின் இந்த பாராட்டில் இணைந்த ஹர்பஜன் சிங் கூறும் பொழுது ” உண்மையில் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த சிவம் துபே கேட்சை அற்புதமாக ரியான் பராக் பிடித்தார். அந்த கேட்ச் ஆட்டத்தை மாற்றிய தருணமாகவே அமைந்தது. அவர் களத்தில் மிகச் சிறப்பான முறையில் செயல்பட்டார்” என்று பாராட்டி கூறியிருக்கிறார்.

- Advertisement -