1998ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக தன்னுடைய முதல் டெஸ்ட் போட்டியில் ஹர்பஜன் களமிறங்கினார். பின்னர் அதே ஆண்டு ஏப்ரல் மாதம் நியூசிலாந்து அணிக்கு எதிராக தன் முதல் ஒருநாள் போட்டியிலும் ஹர்பஜன் களமிறங்கினார். இதுவரை 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 417 விக்கெட்டுகளையும், 236 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 269 விக்கெட்டுகளையும் ஹர்பஜன் சிங் கைப்பற்றியிருக்கிறார். அதே சமயம் இவர் 28 டி20 போட்டிகளில் விளையாடி 25 விக்கெட்டுகளை கைப்பற்றியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமின்றி ஐபிஎல் தொடரில் 2008 முதல் 2017 வரை மும்பை இந்தியன்ஸ் அணியிலும், 2018 மற்றும் 2019ஆம் ஆண்டு சென்னை அணியிலும், 2021 ஆம் ஆண்டு கொல்கத்தா அணியில் விளையாடியுள்ளார். மொத்தமாக 163 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 150 விக்கெட்டுகளை வீழ்த்தி ஹர்பஜன்சிங் அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ள ஹர்பஜன்
ஹர்பஜன்சிங் 2016ஆம் ஆண்டு கடைசியாக இந்திய அணிக்காக சர்வதேச போட்டியில் விளையாடி இருந்தார். அதன்பின்னர் கடந்த 5 ஆண்டுகளில் அவர் எந்தவித சர்வதேசப் போட்டியிலும் இந்திய அணியில் இடம்பெறவில்லை. இருப்பினும் நீண்ட நாட்களாக தன்னுடைய ஓய்வு அறிக்கையை அவர் வெளியிடாமல் இருந்தார். இந்நிலையில் இன்று அவர் தன்னுடைய ஆய்வு அறிக்கையை அதிகாரப்பூர்வமாக சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார்.
சர்வதேச அளவில் ஓய்வு பெற்றுள்ள ஹர்பஜன்சிங் ஐபிஎல் தொடரில் பயிற்சியாளர் பதவியை வகிக்க போவதாகவும் தற்போது தகவல் வெளியாகி உள்ளது. கூடிய விரைவில் அது சம்பந்தமான செய்திகள் அதிகாரப்பூர்வமாக வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பை இந்தியன்ஸ், அகமதாபாத் மற்றும் லக்னோ அணிகளில் இடம் பெற வாய்ப்பு
ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் நீண்ட காலம் அவர் விளையாடியதை நாம் அனைவரும் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் அவரை பவுலிங் பயிற்சியாளராக நியமிக்க அதிக வாய்ப்பு உள்ளது. ஒருவேளை மும்பை அணி நிர்வாகம் அந்தப் பணிக்கு இவரை தேர்ந்தெடுக்க வில்லை என்றால், நிச்சயமாக புதிய அணிகளான லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகள் இவரை நிச்சயமாக ஏதேனும் ஒரு பணியில் நியமிக்க அதிக வாய்ப்பு உள்ளது.
நிச்சயமாக ஹர்பஜன்சிங் இந்த மூன்று அணிகளில் ஏதேனும் ஒரு அணியில் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்பார். தற்பொழுது இந்த மூன்று அணிகளில் எந்த அணி இவரை பயிற்சியாளராக நியமிக்க போகிறது என்பதை நாம் பொறுத்திருந்து பார்ப்போம்.