“கவாஸ்கருக்கு எதிராக ரோஹித் சர்மாவுக்கு ஆதரவாக களத்தில் குதித்த ஹர்பஜன் சிங்” – பரபரப்பான பேட்டி!

0
570
Harbhajan

இந்திய அணி ஐசிசி நடத்தும் தொடர்களில் நாக் அவுட் போட்டிகளில் தொடர்ந்து மோசமாக செயல்பட்டு வருவது விமர்சனத்திற்கு பெரிய அளவில் உள்ளாகி வருகிறது.

மிகக் குறிப்பாக தற்போது ரோகித் சர்மா கேப்டன்சியின் கீழ் முக்கியமான போட்டிகளில் திட்டங்களும் மனநிலையும் இந்திய வீரர்களிடம் மிகவும்மோசமாக இருக்கிறது.

- Advertisement -

இதுகுறித்து பேசி இருந்த கவாஸ்கர், தான் ரோகித் சர்மாவிடம் அதிகம் எதிர்பார்த்ததாகவும், ஆனால் ரோகித் சர்மாவின் செயல்பாடுகள் தமக்கு கேப்டனாக திருப்தி அளிக்கவில்லை என்றும், சிறந்த வீரர்களை வைத்திருந்தும் மிக மோசமாக கேப்டனாக செயல்படுகிறார் என்றும் கடுமையாக விமர்சனம் செய்து பேசியிருந்தார்.

ஒருநாள் உலகக் கோப்பைத் தொடர் இந்தியாவில் அடுத்த மூன்று மாதத்தில் நடக்க இருக்கின்ற நிலையில், கவாஸ்கர் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மீது வைத்த விமர்சனம் மிகவும் முக்கியமான ஒன்றாக கிரிக்கெட் உலகத்தில் பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும், ரோகித் சர்மா தலைமையின் கீழ் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாடியவருமான ஹர்பஜன் சிங் கவாஸ்கர் கருத்துக்கு எதிராக ரோஹித் சர்மாவுக்கு ஆதரவாக தற்பொழுது தனது கருத்தை முன் வைத்திருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து ஹர்பஜன் சிங் கூறும் பொழுது ” ரோகித் சர்மாவை விமர்சிப்பதில் மக்கள் சற்று அதிகமாக போகிறார்கள் என்று நான் உணர்கிறேன். கிரிக்கெட் என்பது ஒரு குழு விளையாட்டு. ஒரு தனிப்பட்ட வீரர் ஒரு நிலையில் இருந்து இன்னொரு நிலைக்கு எடுத்துச் செல்ல முடியாது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி சிறப்பாக செயல்படவில்லை என்பது உண்மைதான். அந்த இடத்தில் விமர்சனம் செய்துவிட்டு அங்கிருந்து நகர்ந்து செல்லுங்கள்.

இதில் ரோகித்தை மட்டுமே விமர்சனம் செய்து கொண்டிருப்பது சரி கிடையாது. அவர் ரன்கள் எடுப்பதில்லை, எடையை குறைக்கவில்லை, சிறப்பான கேப்டன் இல்லை இப்படிப் பேசிக் கொண்டே இருப்பதில் பயன் கிடையாது. அவர் ஒரு சிறந்த தலைவர் என்று நான் நினைக்கிறேன்.

நான் அவருடன் விளையாடினேன். அவரை நான் மிக அருகில் இருந்து பார்த்திருக்கிறேன். மும்பை இந்தியன்ஸ் டிரெஸ்ஸிங் ரூமில் மட்டுமல்ல இந்திய அணியின் ட்ரெஸ்ஸிங் ரூமிலும் அவருக்கு நல்ல மரியாதை உண்டு. எனவே சமீபத்திய முடிவுகளின் அடிப்படையில் அவரை மதிப்பிடுவது சரியான ஒன்று கிடையாது.

அவர் நன்றாக வருவார் என்று நாம் நம்பிக்கை காட்ட வேண்டும். நீங்கள் இதைச் செய்யவில்லை அதைச் செய்யவில்லை என்று சொல்வதை விட, நாம் அவரை ஆதரிக்க வேண்டும்.

பிசிசிஐ-யின் ஆதரவு இருந்தால் நீங்கள் சுதந்திரமாக செயல்படலாம். தோனி மற்றும் விராட் கோலிக்கு மட்டுமல்ல பின்னோக்கி சென்று பார்த்தால் அந்த காலகட்டத்தில் இருந்த கேப்டன்களுக்கு பிசிசிஐ ஆதரவு நிறையவே இருந்திருக்கிறது!” என்று கூறியிருக்கிறார்!