நேற்று ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்ஸ்மேன் திலக் வர்மாவை பாதியில் வெளியே அனுப்பியது தவறானது என ஹர்பஜன்சிங் விமர்சனம் செய்திருக்கிறார்.
நேற்றைய போட்டியில் 11 ஓவர்களில் 111 ரன்கள் மூன்று விக்கெட் இழப்புக்கு எடுத்திருந்த மும்பை இந்தியன்ஸ் அணி, மேற்கொண்டு 20 ஓவர்களில் 203 ரன்களை துரத்தி வெல்ல முடியாமல் பரிதாபமாக தோற்றது. நான்காவது போட்டியில் விளையாடியிருக்கும் அந்த அணிக்கு இது மூன்றாவது தோல்வியாக அமைந்திருக்கிறது.
தொடர்ந்து தவறான முடிவுகள்
மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் இரண்டாவது போட்டிக்கு வில் ஜேக்ஸ் மற்றும் விக்னேஷ் புத்தூர் ஆகியோரை வெளியில் வைத்து குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் தோற்றது. தலைமை பயிற்சியாளர் ஜெயவர்த்தனா இப்படியான தவறுகள் செய்யக்கூடியவர் இல்லை. இருந்தாலும் அவரது பயிற்சியின் கீழ் தவறுகள் நடக்கும் அளவுக்கு அந்த அணியில் குழப்பங்கள் இருக்கிறது.
இதைத்தொடர்ந்து நேற்று 7 பந்துகள் மீதம் இருந்த நிலையில் வெற்றிக்கு 24 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது களத்தில் இருந்த திலக் வர்மாவை அதிரடியாக மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் வெளியில் வர சொல்லிவிட்டது. அவருடைய இடத்திற்கு மிச்சல் சான்ட்னர் அனுப்பப்பட்டார். இந்த விவகாரம் தற்போது ஐபிஎல் வட்டாரத்தில் பெரிய பரபரப்பையும் விமர்சனங்களையும் உருவாக்கி இருக்கிறது. இது குறித்து ஹர்பஜன்சிங் மற்றும் ஹனுமா விகாரி கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.
குஜராத்துக்கு ஹர்திக் சிரமப்படலையா?
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஹர்பஜன்சிங் கூறும் பொழுது “சான்ட்னருக்காக திலக் வருமா வெளியில் சென்றது என்னை பொறுத்தவரையில் மிகவும் தவறான ஒன்று. திலக்கை விட அவர் சிறந்த ஹிட்டரா? அந்த இடத்தில் பொல்லார்டு அல்லது வேறு யாராவது சிறந்த இடங்கள் இருந்து அனுப்பி இருந்தால் அதை நான் புரிந்து கொண்டிருப்பேன். ஆனால் இதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது” என்று கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க : திலக் வர்மாவின் மதிப்பு தெரியும்.. அணியின் நலனுக்காகவே இதை செய்தோம்.. இதை பெரிய விஷயம் ஆக்காதீங்க – மும்பை கோச்
இதுகுறித்து ஹனுமா விகாரி கூறும் பொழுது “சான்ட்னருக்காக திலக் வர்மா வெளியில் அனுப்பப்பட்டார். எனக்கு இந்த முடிவு புரியவில்லை, யாராவது புரிய வையுங்கள். குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக ஹர்திக் பேட்டிங்கில் போராடிய பொழுது அவர் வெளியே அனுப்பப்பட்டாரா? பிறகு இவரை மட்டும் ஏன் வெளியே அனுப்பினார்கள்? என்று கூறியிருக்கிறார்.






