இந்திய கிரிக்கெட்

பாகிஸ்தானுடன் போட்டி.. வியாபாரமும் விளையாட்டும் இருக்க கூடாது – ஹர்பஜன் ஆச்சரிய தைரிய பேச்சு

இந்திய அரசு ஆசியக் கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடுவதற்கு இந்திய அணிக்கு அனுமதி கொடுத்துவிட்ட நிலையில் ஹர்பஜன் சிங் இது குறித்து தைரியமாக பேசியிருக்கிறார்.

- Advertisement -

சமீபத்தில் இங்கிலாந்தில் நடைபெற்ற லெஜெண்ட்ஸ் டி20 தொடரின் அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாட வேண்டி இருந்ததால் இந்திய அணி போட்டியை புறக்கணித்து வெளியேறி வந்தது. இந்த அணியில் ஹர்பஜன்சிங், யுவராஜ் சிங், இர்பான் பதான், ஷிகர் தவான் போன்ற முன்னாள் இந்திய நட்சத்திரங்கள் இருந்தார்கள்.

தொடரும் எதிர்ப்பு

இரு நாடுகளுக்கும் இடையே பதட்டமான சூழ்நிலை நிலவி வருகின்ற காரணத்தினால் இந்திய அணி பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் குறைந்தபட்சம் ஆசியக் கோப்பையில் விளையாடாது என பலரும் நினைத்தார்கள். குறிப்பாக இந்திய முன்னாள் வீரர்கள் இந்திய அணி பாகிஸ்தான அணிக்கு எதிராக விளையாடக் கூடாது என வெளிப்படையாக கருத்து தெரிவித்தார்கள்.

இதில் பஞ்சாப்பைச் சேர்ந்த இந்திய முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் ஆரம்பத்தில் இருந்து பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாட கூடாது, அப்படி விளையாடுவதாக இருந்தால் இரு நாடுகளுக்கும் இடையே சுமுகமான சூழ்நிலை திரும்பி வரவேண்டும் என்று பேசி வந்தார்.

- Advertisement -

இது அரசின் முடிவு

இதுகுறித்து முடிவை மாற்றிக் கொண்டுள்ள ஹர்பஜன் சிங் பேசும்பொழுது ” இந்தியா பாகிஸ்தான் போட்டி எப்பொழுதுமே பெரிய எதிர்பார்ப்புக்கு உள்ளாகி வெளிச்சத்திற்கு வருகிறது. ஆனால் ஆபரேஷன் சிந்துருக்கு பிறகு பாகிஸ்தானுடன் விளையாட்டு மற்றும் வியாபாரம் எதுவுமே கூடாது என மக்கள் கூறி வந்தார்கள்”

இதையும் படிங்க : மோசமான முட்டை.. இந்திய வீரர்கள் மீது ஷாகித் அப்ரிடி கடுமையான விமர்சனம்.. யுவராஜ் சிங் தந்தை பதிலடி

” தற்போது அரசு பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாட அனுமதி கொடுத்திருக்கிறது. எனவே இந்த விஷயத்தில் நாம் தலையிட முடியாது. நம் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட கருத்துக்கள் இருக்கும். நிலைமை சுமூகமாகும் வரையில் பாகிஸ்தான் அணியுடன் விளையாட்டு மற்றும் வியாபாரம் இருக்கக் கூடாது என்பது என்னுடைய தனிப்பட்ட முடிவாகும். அதில் நான் இப்பொழுதும் உறுதியாக இருக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts