ஓபனா சொல்றன் ரிஷப் பண்ட் ஜடேஜா வேண்டாம்.. இவங்க 2 பேர செலக்ட் பண்ணுங்க – ஹர்பஜன் சிங் கோரிக்கை

0
678
Harbhajan

இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் துபாய் மற்றும் பாகிஸ்தான் என இரு நாடுகளில் நடக்க இருக்கும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு ரிஷப் பண்ட் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரையும் இந்திய அணியில் தேர்வு செய்ய வேண்டாம் என ஹர்பஜன் சிங் அதிரடியாக கூறியிருக்கிறார்.

தற்போது இந்திய அணி உள்நாட்டில் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர்களில் இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது. இதில் முதலில் நடைபெறும் டி20 தொடருக்கு இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் பெயர் இடம் பெறவில்லை.

- Advertisement -

இந்திய அணி தேர்வில் இருக்கும் குழப்பங்கள்

அடுத்து இந்திய அணி சாம்பியன் டிராபி தொடரில் விளையாட இருக்கிறது. இதற்கான அணி அறிவிப்பு ஜனவரி 19ஆம் தேதி வெளியிடப்படும் என்று தெரிகிறது. இதில் அணித்தேர்வில் ஜடேஜா மற்றும் ரிஷப் பண்ட் இடத்திற்கு சஞ்சு சாம்சன் மற்றும் அக்சர் படேல் இருவரையும் தேர்வு செய்ய வேண்டுமா? அல்லது கூடாதா? என்கின்ற குழப்பம் சென்று கொண்டிருக்கிறது.

மேலும் சுழல் பந்துவீச்சு ஆல் ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் வேண்டுமா? அல்லது துபாய் மைதான கண்டிஷனுக்கு தகுந்தவாறு மிதவேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் நிதிஷ்குமார் ரெட்டியை தேர்வு செய்ய வேண்டுமா? என்ற குழப்பமும் இருந்து வருகிறது. மேலும் இந்த முறை மூன்றாவது துவக்க ஆட்டக்காரராக ஜெய்ஸ்வால் தேர்ந்தெடுக்கப்பட அதிக வாய்ப்பு உருவாகி இருக்கிறது.

- Advertisement -

ஜடேஜா ரிஷப் பண்ட் வேண்டாம்

இதுகுறித்து கருத்து தெரிவித்திருக்கும் ஹர்பஜன் சிங் கூறும் பொழுது ” கேஎல்.ராகுல் இருக்க ரிஷப் பண்ட் அல்லது சஞ்சு சாம்சன் இருவரில் ஒருவரை இரண்டாவது விக்கெட் கீப்பராக தேர்ந்தெடுக்க வேண்டிய நிலை இருப்பதாக நினைக்கிறேன். ஆனால் கடைசியாக தென் ஆப்பிரிக்காவில் ஒருநாள் கிரிக்கெட் சதம் அடித்த சஞ்சு சாம்சனுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். மேலும் ரிஷப் பண்ட் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் நன்றாக விளையாடினார். அது மிக நீண்ட தொடர் எனவே அவருக்கு ஓய்வு கொடுக்கலாம்”

இதையும் படிங்க : தோனி விஷயத்தில் திடீர் பல்டி அடித்த யுவராஜ் சிங் தந்தை.. கிரிக்கெட் ரசிகர்கள் ஆச்சரியம்

“மேலும் இடதுகை சுழல்பந்து வீச்சாளர்களான ஜடேஜா மற்றும் அக்சர் படேல் இருவரில் யாரை தேர்வு செய்ய வேண்டும்? என்றால், இதனால் வரையில் ஜடேஜா இந்திய அணிக்கு என்ன பங்களிப்பை கொடுத்து வந்தாரோ அந்த பங்களிப்பை கொடுக்க தயாராக அக்சர் படேல் இருக்கிறார். எனவே அவரையே தேர்ந்தெடுக்க வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -