இந்தியா பாகிஸ்தானுக்கு போகக்கூடாது.. ஏன்னா அங்க தினம் நடக்கிறது இதுதான் – ஹர்பஜன் கோரிக்கை

0
269

அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடைபெறும் நிலையில் இந்திய அணி பாகிஸ்தான் வந்து விளையாட வேண்டும் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் பலரும் கூறிவரும் நிலையில், இந்தியாவின் முன்னாள் பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் இந்திய அணி எதற்காக பாகிஸ்தான் செல்ல வேண்டும்? என்று தனது கேள்வியை முன் வைத்திருக்கிறார்.

பாகிஸ்தான் அணி பல வருடங்களுக்குப் பிறகு ஐசிசி தொரான சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடரை நடத்த உள்ளது. பாகிஸ்தானில் கிரிக்கெட்டை மேலும் விரிவுபடுத்த இது ஒரு நல்ல வாய்ப்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு அமைந்திருக்கிறது. இதற்காக மிகத் தீவிரமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரும் நிலையில், இந்திய அணி பாகிஸ்தான் சென்று விளையாட தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது.

- Advertisement -

2008ஆம் ஆண்டு இந்தியா கடைசியாக பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய போது, ஏற்பட்ட தீவிரவாத தாக்குதல் காரணமாக அதற்குப் பிறகு எந்த ஒரு தொடரிலும் இந்திய அணி பாகிஸ்தானில் விளையாடவில்லை. பாகிஸ்தானோடு விளையாடும் போட்டிகள் இருந்தால் அது ஒன்று இலங்கையிலோ அல்லது துபாயிலோ நடைபெறும்.

இந்த நிலையில் பாகிஸ்தான் இந்தியா வந்து விளையாடுவது போல இந்தியாவும் பாகிஸ்தான் வந்து விளையாட வேண்டும் இல்லை எனில், இந்தியாவை ஒதுக்கி வைத்துவிட்டு நாங்கள் சாம்பியன்ஸ் டிராபி தொடரை நடத்துவோம் பாகிஸ்தான் நிர்வாகம் கூறிவரும் நிலையில் வீரர்களின் பாதுகாப்பை விட வேறு எதுவும் முக்கியமில்லை எனவே பாகிஸ்தான் சென்று எதற்காக விளையாட வேண்டும் என்று ஹர்பஜன் சிங் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து ஹர்பஜன் சிங் விரிவாக கூறும்பொழுது “இந்திய அணி எதற்காக பாகிஸ்தான் செல்ல வேண்டும் என்று கேட்கிறேன்? அங்கு பாதுகாப்பு பிரச்சினை முக்கிய காரணமாக இருக்கிறது. பாகிஸ்தானின் சூழ்நிலையைப் பொறுத்தவரை அங்கு ஒவ்வொரு நாளும் ஏதேனும் ஒரு சம்பவங்கள் நடக்கும் அளவுக்கு நிலைமை மோசமாக உள்ளது. எனவே அங்கு சென்று விளையாடுவது சரியாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை.

இதையும் படிங்க:டிராவிட் மகனுக்கு பிரபல டி20 லீக்கில் இடம்.. எனக்கு காசு முக்கியம் இல்லை.. தந்தை வழியில் மகன்

எனவே இந்த விஷயத்தில் பிசிசிஐ நிலைப்பாடு சரியானது. இந்திய வீரர்களின் பாதுகாப்பை விட வேறு எதுவும் முக்கியமில்லை” என்று ஹர்பஜன் சிங் கூறியிருக்கிறார். இருப்பினும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்தியா வந்து விளையாடுவதற்கான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரமாக செய்யப்பட்டுள்ளன என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. சாம்பியன்ஸ் டிராபி தொடர் அடுத்த ஆண்டு பிப்ரவரி முதல் மார்ச் வரை நடைபெறுகிறது.

- Advertisement -