இந்திய டி20 அணிக்கு சூரியகுமார் யாதவை கேப்டனாக கொண்டு வந்தது தனக்கு ஏமாற்றமாக இருந்தது என்றும் அதற்கான காரணம் குறித்தும் இந்திய முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கூறியிருக்கிறார்.
தற்போது இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் நாளை மறுநாள் மத்திய பிரதேச குவாலியர் மைதானத்தில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது. இந்திய டி20 அணியின் நிரந்தர கேப்டனாக சூரியகுமார் யாதவ் இரண்டாவது தொடரை விளையாட இருக்கிறார்.
இந்திய அணிக்கு கம்பீர் புதிய பயிற்சியாளராக பொறுப்பேற்ற முதல் தொடராக இலங்கைக்கு எதிரான டி20 தொடர் அமைந்தது. அப்பொழுது இந்திய கிரிக்கெட் வாரியம் அதிரடி முடிவு எடுத்து புதிய கேப்டனாக சூரியகுமார் யாதவையும், துணைக் கேப்டனாக சுப்மன் கில்லையும் கொண்டு வந்தது. அந்த நேரத்தில் இது எல்லோருக்குமே ஆச்சரியமாக இருந்தது.
டி20 உலக கோப்பை தொடரை வென்ற இந்திய அணியின் துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியா இருந்தார். கேப்டனாக இருந்த ரோஹித் சர்மா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதும் இயல்பாக ஹர்திக் பாண்டியா கேப்டனாக வந்திருக்க வேண்டும். ஆனால் கம்பீர் மற்றும் அகர்கர் வித்தியாசமான முடிவெடுத்தார்கள். மேலும் ஹர்திக் பாண்டியாவின் உடன் தகுதி அவரை கேப்டன் ஆக விடாமல் செய்ததாக அகர்கர் சூசகமாக கூறியிருந்தார்.
இது குறித்து பேசி இருக்கும் ஹர்திக் பாண்டியா கூறும் பொழுது “சூரியகுமாரை இந்திய டி20 அணியின் புதிய கேப்டனாக கொண்டு வந்த பொழுது நான் ஆச்சரியமடைந்தேன். எனக்குஅந்த முடிவு ஏமாற்றமாக இருந்தது. அவர் டி20 அணியின் துணை கேப்டனாக இருந்தார். ரோகித் சர்மா ஓய்வு பெற்றதும் அவர் இயல்பாக கேப்டனாக வரவேண்டும். ஆனால் நீங்களோ உடல் தகுதியை காரணம் காட்டி அவரை கேப்டன் இல்லை என்று சொல்கிறீர்கள். ஆனால் அவர் ஒரு முழு ரவுண்டில் துணை கேப்டனாகவும் கேப்டனாகவும் இருந்திருக்கிறார்”
இதையும் படிங்க : டெஸ்ட்ல தோத்ததுக்கு டி20ல இருக்கு.. நிச்சயம் ஜெயிப்போம்.. இப்படித்தான் ஆடப் போறோம் – நஜ்முல் சாந்தோ சவால்
“டி20 உலக கோப்பையை வென்று விட்டு வந்ததும் இப்படியான முடிவு பெரிய பின்னடைவாக அவருக்கு அமைந்தது. இது சரியான ஒன்று கிடையாது. சூரியகுமார் யாதவ் மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. அவர் மிகவும் திறமையானவர் மேலும் தன்னலமற்றவர். ஆனாலும் ஹர்திக் பாண்டியாவுக்கு இப்படி நடந்திருக்கக் கூடாது” என்று கூறி இருக்கிறார்.