இந்திய அணிக்கு எதிராக நாளை மறுநாள் தொடங்க இருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை நிச்சயம் வெல்வோம் என பங்களாதேஷ் அணியின் கேப்டன் நஜ்முல் சாந்தோ கூறியிருக்கிறார்.
இந்தியாவிற்கு தற்பொழுது சுற்றுப் பயணம் செய்திருக்கும் பங்களாதேஷ் அணி முதலில் நடைபெற்ற இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முழுமையாக இழந்தது. இதைத் தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் நாளை மறுநாள் முதல் மோத இருக்கிறது.
இந்திய அணிக்கு எதிரான தொடரை வெல்வோம்
இது குறித்து பங்களாதேஷ் கேப்டன் நஜ்முல் சாந்தோ கூறும்பொழுது “நியாயமாக நாங்கள் இந்த டி20 தொடரை வெல்ல விரும்புகிறோம். இதற்காக நாங்கள் ஆக்ரோஷமான கிரிக்கெட்டை விளையாட இருக்கிறோம். நடந்து முடிந்த டி20 உலக கோப்பை தொடரில் அரையிறுதிக்கு செல்வதற்கு எங்களுக்கு ஒரு வாய்ப்பு இருந்தது. நாங்கள் அதை தவற விட்டோம். இது ஒரு புதிய அணி, மேலும் எல்லா வீரர்களும் நன்றாக விளையாடுவார்கள் என்று நம்புகிறேன்”
“டெஸ்டில் நாங்கள் சிறந்த கிரிக்கெட்டை விளையாடவில்லை என்று நாங்கள் அறிவோம். ஆனால் டி20 என்பது முற்றிலும் வேறு வகையான விளையாட்டு. குறிப்பிட்ட நாளில் யார் சிறப்பாக செயல்படுகிறார்கள் அவர்கள் வெல்வார்கள். இது கடந்த காலங்களைப் பற்றியது கிடையாது”
நாங்கள் இந்த வேலையை செய்வோம்
“டி20 கிரிக்கெட் என்பது பெரிய பெயர்கள் மற்றும் அனுபவம் வாய்ந்த வீரர்களை பற்றியது எல்லாம் கிடையாது. அந்த நாளில் மூன்று துறைகளிலும் யார் சிறப்பாக செயல்படுகிறார்களோ அவர்கள் வெற்றி பெறுவார்கள். நாங்கள் அப்படியான அணி என்பதை உறுதிப்படுத்த தயாராக இருக்கிறோம்”
இதையும் படிங்க : இந்திய அணிக்கு எதிரா.. என்னை வச்சி என்ன நடக்குதுனே தெரியல.. 2 பேர் விருப்பம் வேறயா இருக்கு – ஸ்டீவ் ஸ்மித் பேட்டி
“விக்கெட் பற்றி எங்களுக்கு அதிக யோசனை எதுவும் கிடையாது. ஆனால் விக்கெட் எப்படி செயல்படும் என்று தெரிந்து கொள்வதற்கான பயிற்சி அமர்வுகள் எங்களுக்கு கிடைத்தது. சர்வதேச அணிகள் செய்வதைப்போல நாங்கள் மிக விரைவாக நிலைமைகளுக்கு எங்களை மாற்றி அமைத்துக் கொள்வோம்” என்று கூறி இருக்கிறார்.