இந்திய கிரிக்கெட்

43 வயசுல எப்படி தோனி உங்களால முடியுதுனு கேட்டேன்.. அவர் பதில் ஆச்சரியமா இருந்தது – ஹர்பஜன் சிங் பேட்டி

இந்திய அணியின் முன்னாள் சுழல் பந்துவீச்சாளர் சமீபத்தில் நண்பர் ஒருவரின் மகள் திருமணத்தில் தோனியை பார்த்து 43 வயதிலும் எப்படி கிரிக்கெட் விளையாட முடிகிறது என்று கேட்டதாகவும் அதற்கு அவருடைய பதில் ஆச்சரியமாக இருந்ததாகவும் தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

தற்போது மகேந்திர சிங் தோனிக்கு 43 வயதாகிறது. இந்த வயதிலும் அவர் சிஎஸ்கே அணிக்கு ஐபிஎல் தொடரில் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேனாக பணியாற்ற இருக்கிறார். இந்த வயதிற்கு இந்த இரண்டு பொறுப்புகளும் மிகவும் அதிகமானது. இருந்தபோதிலும் அவர் யாரையும் விட இதில் இரண்டிலும் சிறப்பாக செயல்படுவதுதான் பலரையும் ஆச்சரியப்படுத்துகிறது.

சமீபத்தில் அவரிடம் கேட்டேன்

இதுகுறித்து பேசி உள்ள ஹர்பஜன் சிங் கூறும் பொழுது “சமீபத்தில் எங்கள் நண்பரின் மகள் திருமணத்தில் நான் தோனியை சந்தித்தேன். அப்போது அவர் மிகவும் பிட் ஆகவும் திடமாகவும் இருந்தார். நான் அவரிடம் இந்த வயதிலும் எப்படி இப்படி இருக்கிறீர்கள்? இதை பராமரிப்பது உங்களுக்கு கடினமாக இல்லையா? என்று கேட்டேன்”

“அதற்கு பதில் சொன்ன மகேந்திர சிங் தோனி எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாக கிரிக்கெட்தான் இருக்கிறது. நான் அதை செய்ய விரும்புகிறேன், வெளியே சென்று விளையாட விரும்புகிறேன் என்று கூறினார். பசி இருக்கும் வரை எந்த கிரிக்கெட்டிலும் இதை செய்ய முடியும். இது எப்படி முடிகிறது என்று அவர் நமக்கு காட்டி இருக்கிறார். அவர் யாரையும் விட இதில் சிறப்பாக இருக்கிறார். அவர் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக தற்காப்பாக இருக்க நினைப்பது கிடையாது. டாமினேஷன் செய்து அடிக்கிறார்”

- Advertisement -

முதலில் வருகிறார் கடைசியாக போகிறார்

“கடந்த ஒன்று இரண்டு மாதங்களாக அவர் பயிற்சி செய்யும் முறை, நீங்கள் கடினமான பயிற்சி செய்தால் உங்களுக்கு சரியான டைமிங் அமைந்து பெரிய சிக்ஸர்கள் செல்லும் என்பதை காட்டுகிறது. அவர் தற்போது சென்னையில் இருந்து ஒரு நாளுக்கு இரண்டு முதல் மூன்று மணி நேரங்கள் பேட்டிங் பயிற்சி மட்டுமே செய்கிறார். இந்த வயதிலும் முதலில் மைதானத்திற்கு பயிற்சிக்கு அவரே வருகிறார் கடைசியாகத்தான் அவர் செல்கிறார்”

இதையும் படிங்க : ஒரே ஒரு காரணம்.. இதுக்காக ரஜத் பட்டிதாரை சப்போர்ட் பண்ணுங்க – விராட் கோலி வேண்டுகோள்

“விக்கெட் கீப்பிங் செய்வதில் தோனியை விட வேகமான கைகள் கொண்ட இன்னொருவரை நான் பார்த்தது கிடையாது. அவர் கைகளுக்கு பந்து சென்று விட்டால் நீங்கள் பத்து முறைக்கு 9 முறை ஆட்டம் இழந்து விடுவீர்கள். அவர் கைகள் பின்னோக்கி செல்வதே கிடையாது. அவர் மின்னல் வேகத்தில் செயல்படுகிறார்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
Published by