தயவு செஞ்சு டெஸ்ட் கிரிக்கெட்டை அழிச்சிடாதீங்க.. இதெல்லாம் ரொம்பவே அசிங்கம் – ஹர்பஜன் சிங் வேதனை

0
136

இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றி பெற்று இந்திய அணியை படுதோல்வி அடையச் செய்தது.

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் டெஸ்ட் கிரிக்கெட் அழிந்து வருவதாக முன்னாள் சுழற் பந்துவீச்சாளரான ஹர்பஜன் சிங் கடுமையான விமர்சனங்களை கூறுகிறார்.

- Advertisement -

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி 159 ரன்கள் எடுக்க, அதற்குப் பிறகு பேட்டிங் செய்த இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸ் முடிவில் 189 ரன்கள் எடுத்தது. அதற்குப் பிறகு தென்னாபிரிக்க அணி 153 ரன்கள் எடுத்த நிலையில் அதனை சேஸ் செய்ய முடியாமல் தடுமாறிய இந்தியா 93 ரன்கள் மட்டுமே எடுத்து 30 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

பல வருடங்களுக்கு பிறகு தென்னாப்பிரிக்க அணி இந்திய மண்ணில் பெற்ற வரலாற்று டெஸ்ட் வெற்றியாக இது கருதப்படுகிறது. இந்த சூழ்நிலையில் இது குறித்து பேசி இருக்கும் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் இது மாதிரியான சுழற் பந்து வீச்சு ஆடுகளங்கள் இந்திய அணியின் டெஸ்ட் கிரிக்கெட்டை விரைவாக அழித்துவிடும் என்று கடுமையான விமர்சனத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். இது போன்ற பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தால் பேட்ஸ்மேனுக்கும் பவுலருக்கும் இடையேயான திறமை வெளியில் தெரியாமல் போய்விடுவதாக சில விமர்சனத்தை கூறி இருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “அவர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டை முற்றிலுமாக அழித்து விட்டார்கள். டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு எனது வாழ்த்துக்கள். டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான ஆடுகளங்கள் உருவாக்கப்பட்டு வருவதை நான் பல வருடங்களாக கவனித்து வருகிறேன். யாரும் அதைப்பற்றி பேசுவதில்லை ஏனென்றால் அணி நன்றாக இருக்கிறது வெற்றி பெறுகிறது. யாரோ ஒருவர் விக்கெட்டுகள் எடுக்கிறார்கள், அந்த விக்கெட்டுகள் வீழ்த்துவதன் மூலமாக சிறந்து விளங்குகிறார்கள்.

இதையும் படிங்க:கோலி ஸ்டைலை பாலோ செய்யனும்… தோல்வியிலிருந்து பாடம் கற்று கொள்ளவில்லை.. வசீம் ஜாபர் கருத்து

எனவே எல்லோரும் எல்லாம் நன்றாக நடக்கிறது என்று உணர்கிறார்கள். ஆனால் இந்த நடைமுறை இன்று தொடங்கவில்லை என்று உணர்கிறேன். இது பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இது தவறான விளையாட்டு முறை என்று நான் நினைக்கிறேன். நீங்கள் எந்த வகையிலும் முன்னேறவில்லை. ஆலையில் கட்டப்பட்ட எருது போல வட்டமிட்டு சுற்றி வருகிறீர்கள். நீங்கள் வெற்றி பெற்றாலும் உண்மையான நன்மையை எதுவும் இல்லை. ஒரு கிரிக்கெட் வீரராக நீங்கள் வளர்வதே இல்லை. எனவே உங்கள் பேட்ஸ்மேன்கள் ரன்கள் எப்படி எடுப்பது என்று தெரியாமல் மைதானங்களில் விளையாடி வருவதையும், அவர்கள் பேட்டிங் செய்யத் தெரியாதது போல காட்டப்பட்டு வருவது குறித்தும் சிந்திக்க வேண்டிய நேரம் இது என்று நினைக்கிறேன். ஆடுகளம் காரணமாக பேட்ஸ்மேன் வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டால் திறமையான பந்துவீச்சாளருக்கும் திறமையான பேட்ஸ்மேனுக்கும் என்ன வித்தியாசம்? ” என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.

- Advertisement -