இந்தியாவில் அமைக்கப்படும் குறிப்பிட்ட ஆடுகளங்கள் இந்திய பேட்ஸ்மேன்களின் தன்னம்பிக்கையை முழுதாக அழித்து விடுவதாகவும் ஒரு கிரிக்கெட் வீரரின் வாழ்க்கையையும் முடித்து விட்டதாகவும் ஹர்பஜன்சிங் குற்றம் சாட்டி இருக்கிறார்.
தற்போது இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளை தோற்று 12 வருடங்களுக்கு பிறகு உள்நாட்டு தொடரில் ஒரு டெஸ்ட் தொடரை இழந்திருக்கிறது. இதற்கான காரணங்கள் குறித்து ஹர்பஜன் சிங் வெளிப்படையாக விமர்சனம் செய்திருக்கிறார்.
இது குறித்து ஹர்பஜன் சிங் பேசும் பொழுது ” இந்தியாவின் சுழல் பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளம் அமைக்கப்படுகிறது. ஆனால் அதில் மிகச் சிறப்பாக விளையாடக்கூடிய பேட்ஸ்மேன்கள் இந்திய அணியில் இருக்கிறார்களா என்றால் இல்லை. இப்படியான ஆடுகளத்தில் விளையாடி எங்கள் பேட்ஸ்மேன்கள் தன்னம்பிக்கையை இழந்து விட்டார்கள். இதற்கு சிறந்த உதாரணம் ரகானே. அவரது கிரிக்கெட் வாழ்க்கை இதனால் பாதித்துவிட்டது”
“வெளிநாடுகளிலும் அவர்கள் தங்களுக்கு சாதகமான ஆடுகளத்தை அமைக்கிறார்கள் என்பது உண்மைதான். அதை நாம் எப்பொழுதும் புரிந்து கொள்கிறோம். ஆனால் அவர்கள் பேட்டிங் செய்வதற்கு மிகவும் சிரமமான ஆடுகளத்தை அமைப்பதில்லை என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்”
“எந்த பந்து திரும்பும் எந்த பந்து நேராக செல்லும் என்பதில் உங்களுக்கு குழப்பம் இருந்தால் நீங்கள் அடிப்பதா அல்லது தடுப்பதா என்றும் தெரியாமல் இருப்பீர்கள். இதனால் எப்பொழுதும் போராட்டத்தில் இருப்பீர்கள். விராட் கோழியை எடுத்துக் கொண்டால் வெளிநாடுகளில் சிறப்பாக விளையாடியிருக்கிறார். இங்குதான் முடியவில்லை”
இதையும் படிங்க : 133 ரன்.. ஆப்கான் மகத்தான புது வரலாறு.. இலங்கை அணியை வீழ்த்தி சாம்பியன் ஆனது.. எமர்ஜிங் ஆசியக் கோப்பை 2024
“உங்களிடம் இப்பொழுது மூன்று மாசமான ஹோம் டெஸ்டுகள் அமைந்துவிட்டன. இப்பொழுது அடுத்து வெளிநாட்டு தொடருக்கு தங்களுக்கு தேவையான சிறந்த பேட்ஸ்மேன் இருப்பதை தேர்வாளர்கள் அறிவார்கள் தேர்வு செய்வார்கள். ஆனால் நீங்கள் உள்நாட்டில் தன்னம்பிக்கையை இழந்து வெளிநாட்டுக்கு செல்வீர்கள். தற்போது இதுதான் நடந்து கொண்டிருக்கிறது” என்று கூறியிருக்கிறார்