இந்திய உள்நாட்டு கிரிக்கெட்டில் சாதித்தவருக்கு இந்திய அணியில் இடம் தராமல் ஐபிஎல் தொடரிலிருந்து வீரர்களை தேர்வு செய்கிறார்கள் என ஹர்பஜன் சிங் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் உள்நாட்டில் இந்திய அணி சுழல் பந்துவீச்சுக்கு எதிராக மிக மோசமாக விளையாடியது. மேலும் இந்திய சுழல் பந்துவீச்சாளர்களும் பெரிய அளவில் விக்கெட்டுகளை கைப்பற்றி நியூசிலாந்து அணிக்கு நெருக்கடியை தர முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய மிதவேகப் பந்து வீச்சு ஆல் ரவுண்டர் நிதிஷ்குமார் ரெட்டி இந்திய டி20 அணிக்கு தேர்வு செய்யப்பட்டதுடன், தற்பொழுது ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியிலும் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். ஐபிஎல் தொடரில் ஒரு சீசன் சிறப்பாக செயல்பட்டதற்கு பெரிய அளவில் வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.
அதே சமயத்தில் உள்நாட்டு கிரிக்கெட்டிலும் இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பு கிடைத்த பொழுதும் சிறப்பாக செயல்பட்டு இருக்கும் சர்துல் தாக்கூருக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.
இதேபோல் மத்திய பிரதேச அணிக்காக விளையாடும் 37 வயதான ஜலக் சக்சேனா 400 விக்கெட்டுகள் மற்றும் 6000 ரன்கள் உள்நாட்டு கிரிக்கெட்டில் எடுத்தும் அவருக்கும் இந்திய அணியில் வாய்ப்பு கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து தனது விமர்சனத்தில் ஹர்பஜன் சிங் கூறும் பொழுது ” ரஞ்சி டிராபியில் நான் ஒரு விக்கெட்டுகள் மற்றும் 6000 ரன்கள் எடுத்த முதல் வீரராக ஜலக் சக்சேனா இந்திய உள்நாட்டு கிரிக்கெட்டில் சாதனை படைத்திருக்கிறார்.அவர் இந்திய அணியில் தேர்வு செய்யப்படுவதற்கு இது போதுமானதாக இல்லை. இதைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை. சீரான செயல்பாடு இருந்தும், அவர் இன்னும் என்ன செய்ய வேண்டும்?”
இதையும் படிங்க : 163 ரன்.. 7 வருடங்கள்.. ரவுப் அயூப் பவுலிங் பேட்டிங்கில் கலக்கல்.. ஆஸியை பாகிஸ்தான் அணி வென்றது
“ஜலக் சக்சேனாவை குறைந்தபட்சம் இந்திய ஏ அணிக்காவது கருத்தில் கொண்டு இருக்க வேண்டும். ஆனால் தேர்வாளர்கள் அவரை இந்திய அணிக்கு கூட தேர்வு செய்யவில்லை. அப்படி ரஞ்சி கிரிக்கெட்டில் விளையாடுவதில் பயன் இல்லையா? இவர்கள் வீரர்களை ஐபிஎல் தொடரிலிருந்துதான் தேர்வு செய்கிறார்கள்” என்று கூறி இருக்கிறார்.