சிராஜை விட ஹர்ஷித் ராணா பெரிய ஆளா?.. டிஎஸ்பி-யை நினைச்சா பாவமா இருக்கு – ஆகாஷ் சோப்ரா வருத்தம்

0
67
Aakash

நேற்று இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணிகள் அறிவிக்கப்பட்டது. இதில் இந்திய நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் அதிரடியாக நீக்கப்பட்டார். இது குறித்து ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்திருக்கிறார்.

தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் இரண்டு அணியில் இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் பும்ரா விளையாடாத நிலையில் அவருடைய இடத்தில் ஹர்ஷித் ராணா விளையாடுவார் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த இடத்தில் கூட சிராஜ் பெயர் வராதது கவலை அளிப்பதாக இருக்கிறது.

- Advertisement -

முகமது சிராஜ் மோசமாக விளையாடவில்லை

இது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் ஆகாஷ் சோப்ரா கூறும் பொழுது “பும்ரா உடல் தகுதி பற்றி யாருக்கும் தெரியாது. மேலும் ஷமி எந்த அளவுக்கு பிட்டாக இருக்கிறார் என்றும் தெரியாது. அவர் பிட்டாக இருந்தாலும் கூட அவரது பார்ம் எப்படி இருக்கிறது என்று தெரியாது. தற்போது அர்ஸ்தீப் சிங் உள்ளே வந்திருக்கிறார். இப்படிப்பட்ட நிலையில் சிராஜிக்கு அணியில் இடமில்லை”

“சிராஜ் அணியில் இடம்பெறாத அளவுக்கு எந்த தவறும் செய்யவில்லை. நான் டிஎஸ்பி-காக உண்மையில் வருந்துகிறேன். ஒரு ஸ்பின்னரை குறைவாக எடுத்திருக்கலாம். சிராஜை அணியில் சேர்த்திருக்கலாம். மேலும் இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட் தொடரில் சிராஜ் இல்லாமல் ஹர்ஷித் ராணா அவரை முந்தி இடம்பெற்று இருப்பது ஆச்சரியத்தை கொடுக்கிறது”

- Advertisement -

முன்கூட்டியே முடிவு செய்து விட்டார்கள்

“தற்போது அணியில் மூன்று பிரதான வேகப்பந்து வீச்சாளர்கள் மட்டுமே இருக்கிறார்கள். இது எனக்கு பெரிய செய்தியாக படுகிறது. நீங்கள் இப்படி மூன்று பேரை மட்டுமே தேர்வு செய்யும் பொழுது இரண்டு பேரை மட்டுமே வைத்து விளையாடுவீர்கள். நீங்கள் மூன்று சீமார்களை விளையாட நினைத்திருந்தால் நான்கு பேரை தேர்வு செய்திருப்பீர்கள்”

இதையும் படிங்க : விராட் ரோகித் கிரிக்கெட் எதிர்காலம் என்ன?.. வெளிப்படையாக பதில் சொன்ன அகர்கர்.. மாறும் நிலவரங்கள்

“இந்த நிலையில் நீங்கள் தற்போது என்ன முடிவுக்கு வந்திருக்கிறீர்கள் என்றால், நீங்கள் மூன்று ஸ்பின்னர் களை வைத்து விளையாட போகிறீர்கள். இப்படி விளையாடுவது சரியாக இருக்கும் என்று நீங்கள் முன்கூட்டியே முடிவு செய்து ஆரம்பித்து விட்டீர்கள்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -