இந்தியா தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையே கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் ஆடுகளம் கேலிக்கூத்தானது என இந்திய முன்னாள் சுழல் பந்துவீச்சாளர் ஹர்பஜன்சிங் விமர்சனம் செய்திருக்கிறார்.
இந்த போட்டியில் இரண்டாவது நாளான இன்று இந்தியா 9 விக்கெட்டுகளை இழக்க தென் ஆப்பிரிக்க அணி ஏழு விக்கெட்டுகளை இழந்து ஒரே நாளில் 16 விக்கெட்டுகள் விழுந்திருக்கிறது. இதன் காரணமாக இந்த ஆடுகளும் குறித்து விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் இந்த ஆடுகளம் குறித்து பதிவு செய்துள்ள ஹர்பஜன் சிங் “இந்தியா தென் ஆப்பிரிக்கா முதல் டெஸ்ட் போட்டி கிட்டத்தட்ட இரண்டாவது நாளிலேயே முடிவுக்கு வந்துவிட்டது. இப்படியா டெஸ்ட் கிரிக்கெட்டை கேலிக்கூத்தாக மாற்றுவது. ரிப் டெஸ்ட் கிரிக்கெட்” என்று கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்.
இந்த நிலையில் இந்திய முன்னாள் வீரரை தாண்டி வெளிநாட்டு முன்னால் வீரரான மைக்கேல் வாகனும் ” இந்தியா தென் ஆப்பிரிக்கா அணிகள் விளையாடும் முதல் டெஸ்ட் போட்டியின் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தின் ஆடுகளம் மிகவும் மோசமானது” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இது குறித்து ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் ஆரோன் பின்ச் கூறும் பொழுது “பந்து நன்றாக திரும்பும், அதே நேரத்தில் பேட்ஸ்மேன் சுற்றி ஃபீல்டர்கள் நிற்கும்படியான கிரிக்கெட்டை பார்ப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். இந்த ஆடுகளத்தை பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என்று கேட்டிருக்கிறார்.
இதையும் படிங்க : 2025 ஐபிஎல் மினி ஏலத்திற்கு வரும்.. முக்கியமான 30 வீரர்கள்.. அணி வாரியாக முழு பட்டியல்
இதற்கு பதில் அளித்துள்ள அஸ்வின் “டெம்பா பவுமா இந்த ஆடுகளத்தில் எப்படி விளையாட முடியும் என்று தன்னுடைய தற்காப்பு பேட்டிங் தொழில்நுட்பத்தால் காட்டி இருக்கிறார். அவர் பந்தின் டாப் ஆப் த பவுன்சில் தடுத்து விளையாடினார். உங்களுக்கு பந்தில் லெந்த் என்ன என்பதை கணிப்பதில் பிரச்சனை இருந்தால் இந்த ஆடுகளம் மோசமானதுதான்” என்று கூறி ஆடுகளத்திற்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்.