இந்திய கிரிக்கெட்

பும்ராவுக்கு ஒரு நியாயம் அவருக்கு ஒரு நியாயமா?. முன்னாள் வீரர் தாக்கு.. இந்திய அணிக்குள் வெடிக்கும் புது சர்ச்சை

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, காயம் காரணமாக கடந்த சில வாரங்களாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாமல் இருந்து வருகிறார். இந்நிலையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இருபது ஓவர் தொடரிலும், ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் அவர் திரும்பலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

- Advertisement -

ஆனால் பும்ரா சமீபத்தில் உள்ளூர் போட்டிகளில் விளையாடவில்லை என்றாலும், அவரை அணிக்குத் தேர்வு செய்வது குறித்து முன்னாள் இந்திய வீரர் சடகோப்பன் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார். குறிப்பாக ஹர்ஷித் ராணா போன்ற இளம் வீரர்களுக்கு உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும் என்ற விதிமுறை வலியுறுத்தப்படும் நிலையில், பும்ராவுக்கு மட்டும் வேறு அணுகுமுறை இருப்பதாக அவர் விமர்சித்துள்ளார்.

பும்ரா இந்திய அணிக்கு எவ்வளவு முக்கியமான வீரர் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். அதே நேரத்தில் தேர்வு விதிமுறைகள் அனைத்து வீரர்களுக்கும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டுமா என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது. இதனால் இந்திய அணியின் தேர்வு முறையை சுற்றி மீண்டும் விவாதம் தொடங்கியுள்ளது.

- Advertisement -
Published by