அடுத்த ஆண்டு பாகிஸ்தானின் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் மிகவும் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டு வருகின்றன. இந்த நிலையில் இந்திய அணி பாகிஸ்தான் சென்று விளையாடுவது தொடர்பாக பாகிஸ்தான் பத்திரிகையாளர் மற்றும் ஹர்பஜன் சிங் இடையே கடுமையான வாக்குவாதம் ட்விட்டரில் நடைபெற்றது.
நேற்று ஐசிசி பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி நடைபெறுவதற்கு 70 மில்லியன் டாலர் பணத்தை ஒதுக்கியது. மேலும் இந்திய அணி பாகிஸ்தான் வருவதைப் பற்றி தேவையில்லாத கருத்துக்களை வெளியில் இருப்பவர்கள் பேச வேண்டாம் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவரும் செய்தி வெளியிட்டு இருந்தார்.
அதே சமயத்தில் இந்திய கிரிக்கெட் வாரியம் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட அடுத்த வருடம் பாகிஸ்தான் செல்லுமா? என்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக எந்தவித அறிக்கையையும் கொடுக்கவில்லை. எனவே இந்த விஷயத்தில் இறுதி முடிவு என்ன எடுக்கப்படும்? என்பதும் தெரியவில்லை.
இந்த விஷயத்தில் இந்திய முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் வெளிப்படையாக இந்திய அணி பாகிஸ்தான் சென்று விளையாட கூடாது என குறிப்பிட்டிருந்தார். மேலும் பாகிஸ்தானில் பாதுகாப்பு பிரச்சனைகள் இருப்பதாகவும், இங்கு விளையாட்டை விட வீரர்கள் முக்கியம் என எண்ண வேண்டும் எனவும் கூறி இருந்தார். இவர் தொடர்ந்து இதை வலியுறுத்துவது பாகிஸ்தான் தரப்பை எரிச்சல் படுத்தியிருந்தது.
இந்த நிலையில் பாகிஸ்தான் பத்திரிக்கையாளர் பரீத் கான் 2006 ஆம் ஆண்டு இந்திய அணி பாகிஸ்தான் சென்ற போது நடைபெற்ற போட்டி ஒன்றில் ஹர்பஜன் சிங் பந்துவீச்சில் சாஹித் அப்ரிடி நான்கு சிக்ஸர்கள் அடிக்கும் வீடியோவை பதிவிட்டு ‘ ஹர்பஜன் நீங்கள் எதற்காகத்தான் பாகிஸ்தான் வருவதற்கு தயங்குகிறீர்கள். பாதுகாப்பு ஒரு பிரச்சனை கிடையாதுதானே என்று கிண்டலாகக் குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படிங்க : உறுதியா சொல்றன்.. இந்திய கிரிக்கெட்ல இது ஆரம்பிக்க போகுது.. அந்த பட்டனை அழுத்த போறோம் – ரோஹித் சர்மா பேட்டி
இதற்கு பதில் அளித்த ஹர்பஜன்சிங் முதலில் இலங்கை வீரர்கள் பாகிஸ்தான் சென்ற பொழுது அங்கு அவர்கள் மீது நடைபெற்ற விரும்பத்தகாத சம்பவத்தின் புகைப்படத்தை கொடுத்து ‘ விளையாட்டில் வெற்றி தோல்வி சகஜம். ஆனால் இதற்காகத்தான் நான் பாகிஸ்தான் வந்து விளையாடக்கூடாது என்று சொல்கிறேன் என்று பதிலடி கொடுத்திருந்தார். மேலும் உடனே இதிலிருந்து வெளியேறி போய்விடு என்று ஒரு கடுமையான வார்த்தையையும் பயன்படுத்தி பேசி இருந்தார். பிறகு மேற்கொண்டு இந்த விவாதம் நடைபெறவில்லை.