SRH வீரர்கள் மைதானத்துல இல்ல மாலத்தீவுல இருக்காங்க.. அந்த ஆட்டத்தை இங்க போடலாமே – ஹர்பஜன் சிங் விமர்சனம்

0
39
Harbhajan

நடப்பு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் செயல்பாடுகள் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் தீப் தாஸ் குப்தா மற்றும் ஹர்பஜன் சிங் இருவரும் விமர்சனம் செய்திருக்கிறார்கள்.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் 286 ரன்கள் குவித்து அட்டகாசமாக ஆரம்பித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, தற்போது புள்ளி பட்டியலில் 10 போட்டிகளில் 7 போட்டிகளை தோற்று ஆறு புள்ளிகள் எடுத்து ஒன்பதாவது இடத்தில் பரிதாபமாக இருக்கிறது.

- Advertisement -

சிக்க வைத்த பிசிசிஐ

கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ஆடுகளங்கள் பேட்டிங் செய்வதற்கு மிகவும் சாதகமாக முதல் பாதியில் அமைக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் போட்டியை பார்ப்பதற்கு சுவாரசியமே இல்லை என கருத்து தெரிவித்து வந்தார்கள். மேலும் பெரிய அளவில் ரன்கள் செல்லும் போட்டிக்கு ரசிகர்களிடம் வரவேற்பும் இல்லாமல் இருந்தது.

இதன் காரணமாக இந்த முறை ஓரளவுக்கு பேட்டுக்கும் பந்துக்கும் சமநிலையை கொண்டு வர பிசிசிஐ முடிவு செய்து ஆடுகளங்களை கொஞ்சம் தரம் உயர்த்தி கொடுத்து இருக்கிறது. இதன் காரணமாக அதிரடியான பேட்ஸ்மேன்களை வைத்திருக்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பேட்டிங் அணுகுமுறையை எவ்வாறு அமைப்பது என்பதில் சிக்கிக்கொண்டது. இதன் காரணமாக அந்த அணியால் தற்போது வரை மீண்டு வர முடியவில்லை. இதன் காரணமாக அணி நிர்வாகம் மொத்த வீரர்களையும் மாலத்தீவுக்கு கூட்டி சென்று வந்ததும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இவர்கள் மாலத்தீவிலேயே இருக்கிறார்கள்

இது குறித்து தீப்தாஸ் குப்தா கூறும் பொழுது “ஹைதராபாத் அணியினர் உடல் ரீதியாக மைதானத்தில் இருப்பது போல தெரிகிறது. ஆனால் மனதளவில் அவர்கள் இன்னும் மாலத்தீவில்தான் இருக்கிறார்கள். நீங்கள் நன்றாக கவனித்தால் நாம் அவர்களுடைய சாதாரண பந்துவீச்சு குறித்து மட்டுமே பேசிக் கொண்டிருந்தோம், ஆனால் அவர்களுடைய ஃபீல்டிங்கும் மிகவும் மோசமாக சாதாரணமாகவே இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க : பிசிசிஐ சூரியவன்சியை காப்பாத்தணும்.. அந்த 2 வீரர்கள் மாதிரி கெட்டுப் போயிடுவார் – கிரேக் சேப்பல் பேச்சு

இது குறித்து பேசி உள்ள ஹர்பஜன் சிங் கூறும் பொழுது ” குறிப்பிட்ட இந்த பந்தை ஃபீல்டர் தடுத்து நிறுத்தி இருக்க வேண்டும். ஆனால் அவர் மிக சுமாராகவே டைவ் அடித்தார். ஆனால் மாலத்தீவில் இதைவிட சிறப்பான டைவை இவர்கள் நீச்சல் குளத்தில் அடித்தார்கள். ஆனால் இதை அப்படியே மைதானத்தில் இவர்களால் செய்ய முடியவில்லை” என்று நகைச்சுவையாக கலாய்த்து இருக்கிறார்.

- Advertisement -