அடுத்த இந்திய டி20 கேப்டனா இந்த பையனை தயார்படுத்துங்க.. வேற யாரும் வேண்டாம் – ஹர்பஜன் சிங் பேட்டி

0
19
Harbhajan

2021 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் அரையிறுதியில் பத்து விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியிடம் படுதோல்வி அடைந்து வெளியேறியது. இதற்கு அடுத்து ஹர்திக் பாண்டியா டி20 அணிக்கு கேப்டனாக கொண்டுவரப்பட்டு, மீண்டும் ரோகித் சர்மா கேப்டன் ஆக மாற்றப்பட்டு இருக்கிறார். இவருக்கு அடுத்து யாரை இந்திய டி20 அணிக்கு கேப்டனாக கொண்டு வரலாம்? என ஹர்பஜன் சிங் கருத்து தெரிவித்திருக்கிறார்.

தற்பொழுது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடருக்கு முன்பாக இந்தியாவில் முதல்முறையாக ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி விளையாடியது. இந்த தொடருக்கு இந்திய அணியின் கேப்டனாக 14 மாதங்கள் கழித்து ரோகித் சர்மா இந்திய டி20 அணிக்கு திரும்பினார். மேலும் அவருடன் விராட் கோலியும் இந்திய டி20 அணிக்கு திரும்பினார்.

- Advertisement -

எனவே இவர்கள் இருவரும் நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் இடம் பெறுவது உறுதியான விஷயமாக இருக்கிறது. அதே சமயத்தில் இவர்கள் இருவருக்குமே இதுவே கடைசி டி20 உலகக் கோப்பையாகவும் இருக்கும் என்பதில் சந்தேகம் கிடையாது.

இவர்களுக்கு அடுத்து இளம் வீரர்களை இவர்களது இடத்தில் நிரப்ப வேண்டியிருக்கிறது. மேலும் ரோகித் சர்மா கேப்டன் என்கின்ற காரணத்தினால் புதிய கேப்டனை கண்டறிய வேண்டிய தேவையும் இருக்கிறது.ஹர்திக் பாண்டியாவின் தீராத காயங்கள் மற்றும் அவருடைய கேப்டன்சி நிறைய விமர்சனங்களை சந்தித்து வருவதால், ரோகித் சர்மா இடத்திற்கு புது கேப்டனை தயார் செய்ய வேண்டி இருக்கிறது.

இந்த நிலையில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சனின் கேப்டன்சி செயல்பாடு மிகவும் சிறப்பாக இருந்து வருகிறது. இதன் காரணத்தால் அவரை டி20 உலகக் கோப்பை அணிக்கு தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற பேச்சுகள் இருந்து வருகிறது. ஆனால் ஹர்பஜன் சிங் இன்னும் ஒரு படி மேலே போய் பேசி இருக்கிறார்.

- Advertisement -

இதையும் படிங்க : நேத்து ஜெய்ஸ்வால் கிட்ட இந்த விஷயத்தை கவனிச்சீங்களா?.. பையன் வேற மாதிரி ரகம் – பிரையன் லாரா பாராட்டு

இது குறித்து ஹர்பஜன் சிங் கூறும் பொழுது “நேற்று ஜெயஸ்வால் விளையாடிய விதத்தில், கிளாஸ் நிரந்தரம் பார்ம் என்பது தற்காலிகமானது என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. டி20 உலகக் கோப்பை அணிக்கு இந்திய விக்கெட் கீப்பர் யார் என்கின்ற பேச்சுக்கே இடம் கிடையாது. சஞ்சு சாம்சன் நேராக டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் இடம் பெற வேண்டும். மேலும் அவரை ரோஹித் சர்மாவுக்கு அடுத்து இந்திய டி20 அணியின் கேப்டனாக வளர்த்தெடுக்க வேண்டும்” எனக் கூறியிருக்கிறார்.