“20 30 ரன்கள் குறைவா எடுத்திருந்தா.. நாங்க தோத்திருப்போமா?” – கேப்டன் ரோகித் சர்மா அதிரடியான பேட்டி!

0
2566
Rohit

இந்திய அணி 12 ஆண்டுகளுக்கு பிறகு ஒருநாள் கிரிக்கெட் அரை இறுதியில் வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று இருக்கிறது.

இன்று ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்துக்கு எதிராக மும்பை மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் வென்று அசத்தியிருக்கிறது.

- Advertisement -

இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் விராட் கோலி இருவரது சதங்கள் உடன் நான்கு விக்கெட் இழப்புக்கு 397 ரன்கள் என்கின்ற பெரிய ரன்னை குவித்தது.

இதற்கு அடுத்து களம் இறங்கி விளையாடிய நியூசிலாந்து அணி இந்திய அணிக்கு நல்ல போட்டியை கொடுத்தது. வெல்வதற்கும் வாய்ப்பு நியூசிலாந்துக்கு இருந்தது என்று கூட கூறலாம்.

முதலில் இரண்டு விக்கெட் கைப்பற்றி இருந்த சமி பிறகு வந்து மேலும் 5 விக்கெட் கைப்பற்றி இந்திய அணியின் வெற்றியை எளிமையாக்கி கொடுத்தார். இறுதியில் 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

- Advertisement -

போட்டி முடிவுக்கு பின் பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா “நான் இங்கு நிறைய கிரிக்கெட் விளையாடி இருக்கிறேன். எப்பொழுதும் இங்கு ரிலாக்ஸ் செய்யவே முடியாது. நீங்கள் வேலையை சீக்கிரம் செய்து முடிக்க வேண்டும். எங்கள் மீது அழுத்தம் இருக்கும் என்று எங்களுக்கு தெரியும். நாங்கள் களத்தில் சற்று சளைத்தவர்களாக இருந்த போதிலும் கூட அமைதியாக இருந்தோம்.

இப்படியான விஷயங்கள் கண்டிப்பாக நடக்கும். ஆனால் நாங்கள் எங்களுடைய வேலையைச் செய்ததில் மகிழ்ச்சி. நாங்கள் இருவது முப்பது ரன்கள் குறைவாக எடுத்திருந்தால் சிக்கலில் இருந்து இருப்போமா என்று சொல்வது கடினம். ஏனென்றால் நாங்கள் அப்படி எடுத்து இருந்தால் அவர்கள் இவ்வளவு விரைவாக தாக்கி விளையாட மாட்டார்கள்.

வில்லியம்சன் மற்றும் மிட்சல் இருவரும் சிறப்பாக பேட்டிங் செய்தார்கள். நாங்கள் அமைதியாக இருக்க வேண்டி இருந்தது. அப்பொழுது எங்களுக்கு ஒரு கேட்ச் அல்லது ஒரு ரன் அவுட் தேவைப்பட்டது. சமி புத்திசாலியாக இருந்தார்.

எல்லா வீரர்களும் இருக்கும் பார்ம், குறிப்பாக பேட்டிங் யூனிட்டில் முதல் ஐந்து முதல் ஆறு வீரர்கள் வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம் மிகச் சிறப்பாக செயல்படுகிறார்கள். இந்த போட்டியில் ஸ்ரேயாஸ் என்ன செய்தார் என்று பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது.

கில் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்தார். துரதிஷ்டவசமாக அவர் வெளியேற வேண்டி இருந்தது. விராட் கோலி எப்பொழுதும் செய்வதை இந்த முறையும் செய்தார். மேலும் தன்னுடைய சாதனை சதத்தையும் பதிவு செய்தார்.

எங்களுக்கு அழுத்தம் இல்லை என்று சொல்ல முடியாது. எல்லா போட்டியிலும் அழுத்தம் இருக்கிறது. அரை இறுதி என்பதால் கொஞ்சம் கூடுதல் அழுத்தம் வருகிறது. ஆனால் இதைப் பற்றி நாங்கள் அதிகம் யோசிக்காமல் இருக்க விரும்பினோம். முதல் போட்டியில் என்ன செய்தோமோ அதையே தொடர்ந்து செய்கிறோம். விஷயங்கள் எங்களுக்கு நொடியில் வருகிறது!” என்று கூறி இருக்கிறார்!