“இது நடக்காம இருந்திருந்தா.. 300 ரன் மேல அடிச்சு ஜெயிச்சிருப்போம்!” – இலங்கை கேப்டன் பேச்சு!

0
3191
Kusal

பதிமூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இன்று தங்களது கடைசி லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகள் பெங்களூரில் மோதிக்கொண்டன.

ஏற்கனவே அரை இறுதி வாய்ப்பை இழந்துவிட்ட இலங்கை அணிக்கு இந்த போட்டி பெரிய முக்கியத்துவம் வாய்ந்தது கிடையாது. அதே சமயத்தில் உலகக் கோப்பை தொடரை இறுதியாக வெற்றி உடன் முடித்துக் கொண்டு நாடு திரும்புவதற்கு உதவக்கூடிய போட்டியாக இருந்தது.

- Advertisement -

இன்னொரு பக்கத்தில் இந்தப் போட்டியை வெல்வது அரையிறுதிக்கு மிக அவசியமாக நியூசிலாந்துக்கு இருந்தது. அதே சமயத்தில் நல்ல ரன் ரேட்டில் வென்றால் அரையிறுதி வாய்ப்பை எளிமையாக்க முடியும் என்கின்ற நிலை இருந்தது.

இந்த நிலையில் டாஸ் வென்று வந்து விஷயம் நியூசிலாந்து அணி 171 ரன்களில் இலங்கை அணியை முடக்கியது. மேற்கொண்டு விளையாடி 23.2 ஓவரில் அபார வெற்றி பெற்றது.

இதன் மூலம் நல்ல ரன் ரேட் கிடைத்துள்ள நியூசிலாந்து அணி ஏறக்குறைய அரை இறுதிக்கு முன்னேறி விட்டது. இதனால் அறஇருதியில் இந்திய அணியை எதிர்த்து மும்பையில் விளையாட இருக்கிறது.

- Advertisement -

இலங்கையணி இந்த முறை மொத்தம் ஒன்பது லீக் போட்டிகளில் விளையாடி இரண்டு போட்டிகளை மட்டுமே வென்றிருக்கிறது. தோல்வி அடைந்த போட்டிகளில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக மட்டுமே போராடி தோல்வி அடைந்திருந்தது.

இந்த நிலையில் தோல்விக்கு பிறகு பேசிய இலங்கை கேப்டன் குசால் மெண்டிஸ் கூறும் பொழுது “முதல் 10 ஓவர்களில் நாங்கள் மூன்று நான்கு விக்கெட்டுகளை இழந்து விட்டோம். இதனால்தான் நாங்கள் பேட்டிங்கில் பெரிய சிரமப்பட்டோம். மிடில் ஓவர்களில் எங்களுக்கு ஒரு பார்ட்னர்ஷிப் அமைந்திருந்தால் எளிமையாக 300 ரன்களுக்கு மேல் அடித்திருப்போம்.

இந்த விக்கெட்டில் மதுசங்கா நன்றாக பந்து வீசினார். ஆனால் ஒரு சிறிய இலக்கை நாங்கள் பாதுகாக்க வேண்டி இருந்ததால் எல்லாமே கடினமாக இருந்தது.

இரண்டு ஆட்டங்களுக்கு பிறகு நான் கேப்டன் பதவிக்கு இந்த உலகக் கோப்பையில் வந்தேன். நான் அதை மிகவும் ரசித்தேன். ஆனால் என்னுடைய சொந்த பார்ம் சரி இல்லை. சில இளம் வீரர்கள் மிக நன்றாக செயல்பட்டு இருக்கிறார்கள். அவர்கள்தான் எங்களுடைய எதிர்கால சொத்து!” என்று கூறியிருக்கிறார்!