கதையே வேற அந்த ஒன்னு மட்டும் நடந்திருந்தா.. இந்நேரம் செமி பைனல் போயிருப்போம்.. பாபர் அசாம் விரக்தி பேட்டி!

0
2153
Babar

நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெற்றது. இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிக்கொண்டன.

பாகிஸ்தான் அணிக்கு அரையிறுதிக்கு 1 சதவீத வாய்ப்பு மட்டுமே இருந்தது அதுவும் முதலில் பேட்டிங் செய்தால் மட்டுமே இருந்தது. ஆனால் இன்றைய போட்டியில் டாசை தோற்று இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்ய, அந்த வாய்ப்பு அத்தோடு முடிந்து விட்டது.

- Advertisement -

முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி அதிரடியாக விளையாடி 337 ரன்கள் எடுத்தது. இதற்கு அடுத்த தொடர்ந்து விளையாடிய பாகிஸ்தானை 244 ரன்களில் சுருண்டது. இங்கிலாந்து அணி 93 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

பாகிஸ்தானை தொடர்ச்சியாக ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பையில் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக அரைஇறுதி சுற்றுக்கு முன்னேற முடியாமல் வெளியேறி இருக்கிறது.

குறிப்பாக கடந்த இரண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைகள் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்தில் நடைபெற்றது. இந்த உலகக் கோப்பை ஆசிய துணைக்கண்டத்து இந்தியாவில் நடைபெறுகின்ற காரணத்தினால் பாகிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேற முடியாமல் போனது பெரிய விமர்சனங்களை கொண்டு வந்திருக்கிறது. குறிப்பாக ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக தோற்றது.

- Advertisement -

தோல்விக்கு பின் பேசிய பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் கூறும்பொழுது “நாங்கள் செயல்பட்டதில் மிகவும் ஏமாற்றம் அடைகிறோம். நாங்கள் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக வெற்றி பெற்று இருந்தால் கதை வேறு மாதிரியாக இருந்திருக்கும். நாங்கள் பேட்டிங், பௌலிங், பீல்டிங் என எல்லா பக்கத்திலும் தவறுகள் செய்தோம்.

நாங்கள் 20 முதல் 30 ரன்கள் அதிகமாக கொடுத்தோம். நாங்கள் சில எளிமையான பந்துகளை அடிப்பதற்கு வீசினோம். எங்கள் சுழற் பந்துவீச்சாளர்கள் விக்கெட்டுகளை வீழ்த்தவில்லை அது பெரிய விளைவை ஏற்படுத்தியது.

மிடில் ஓவர்களில் சுழற் பந்துவீச்சாளர்கள் விக்கெட்டுகளை வீழ்த்தவில்லை என்றால் நீங்கள் சிரமப்படுவீர்கள். ஒன்றாக அமர்ந்து பிரச்சனைகளை பேச வேண்டும். நேர்மறைகளை எடுத்துக் கொள்வதோடு தவறுகள் குறித்து விவாதிப்போம். எனது அனுபவத்திலிருந்து சிறந்ததைச் செய்வேன்!” எனக் கூறியிருக்கிறார்!