இதை சொல்வதால் என்மீது கோபப்படாதீர்கள்… இந்திய அணியில் திறமையான வீரர்கள் இருந்தும், திமிர்தனம் மற்றும் வீண் ஆக்ரோஷம் காரணமாக 10 வருடங்கள் கோப்பை இல்லாமல் இருக்கிறார்கள் – ஜாம்பவான் கடும் சாடல்!

0
7191

இந்திய அணியிடம் வீண் ஆக்ரோஷம் மற்றும் அசட்டு நம்பிக்கை இருக்கிறது. இதன் காரணமாகத்தான் கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வருகிறார்கள் என்று கடுமையாக சாடியுள்ளார் முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் அணியின ஜாம்பவான் ஆண்டி ராபர்ட்ஸ்.

இந்தியா கிரிக்கெட் அணி கடைசியாக 2013ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரின் கோப்பையை வென்றது. அதன் பிறகு நடைபெற்ற ஐசிசி தொடர்களில், 2014ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் வரை.. நான்கு முறை அரையிறுதி மற்றும் நான்கு முறை இறுதி போட்டிகள் வரை வந்து கோப்பையை வெல்ல முடியாமல் வெளியேறியுள்ளது.

- Advertisement -

நடைபெற்று முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் வெற்றிபெற்று கோப்பைக்கான வறட்சியை போக்குவார்கள் என்று எதிர்பார்த்து இருந்தபோது ஏமாற்றமே மீண்டும் கிடைத்தது. இதனால் பல்வேறு விதமாக இந்திய அணி விமர்சிக்கப்பட்டு வருகிறது.

கேப்டனாக இருந்த விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் பாரபட்சம் பார்க்காமல் சமூக வலைதளங்களில் ரசிகர்களால் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இந்திய அணி இப்படி தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்து வருவதற்கும், குறிப்பாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வியை தழுவியதற்கும் என்ன காரணம்? என்பதை தனது பேட்டியில் பேசியுள்ளார் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான் ஆண்டி ராபர்ட்ஸ்.

“இந்திய வீரர்கள் மத்தியில் திமிர்தனம் தெரிகிறது. எதையும் செய்துவிட முடியும், யாரையும் வீழ்த்திட முடியும் என்கிற அசட்டு நம்பிக்கையும் தெரிகிறது. உலகில் உள்ள மற்ற அணிகள் மீது ஏளனமான பார்வை அவர்களிடம் இருக்கிறது. நம்மிடம் பலமிக்க வீரர்கள் இருக்கிறார்கள் எதிரணியால் என்ன செய்துவிட முடியும் என்கிற மனப்போக்கை கடைபிடிக்கிறார்கள். பலம் மிக்க வீரர்கள் அணியில் இருக்கும் பட்சத்தில் எந்த கிரிக்கெட்டிற்கு எந்த வீரர்களை பயன்படுத்த வேண்டும் என்பதில் கவனம் செலுத்தி போட்டிகளை வெல்வதற்கு பார்க்க வேண்டும் என்ன செய்துவிடும் முடியும் எனும் போக்கை கைவிட வேண்டும்.

- Advertisement -

தலைசிறந்த வீரர்கள் மட்டுமல்லாது; எதிர்கால இளம் வீரர்களையும் இந்திய அணி கொண்டிருப்பது வரப்பிரசாதம். பல அணிகளுக்கு இது போன்ற ஆடம்பரம் இல்லை. ஆகையால் இதனை வைத்து பல வருடங்களாக கோப்பையை வெல்ல முடியவில்லை என்பது, தவறு வீரர்களின் திறமைகளில் இல்லை வீரர்களின் மனப்போக்கில் இருக்கிறது என்பதை புரிந்து கொண்டு செயல்படுங்கள்.” என எச்சரிக்கை கலந்த அறிவுரையை வெளிப்படுத்தியுள்ளார் ஆண்டி ராபர்ட்ஸ்.