நல்ல மனுஷனுக்கா இப்படி நடக்கணும்… உருக்கமான வீடியோ வெளியிட்டு நாட்டுக்கு கிளம்பிய கென் வில்லியம்சன்!

0
519

சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியின்போது காலில் காயம் ஏற்பட்டதால் மொத்தமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளார் கேன் வில்லியம்சன். நாட்டிற்கு திரும்பும் முன்னர் உருக்கமான வீடியோ ஒன்று வெளியிட்டு இருக்கிறது.

கடந்த மார்ச் 33 ஆம் தேதி ஐபிஎல் தொடர் துவங்கியது. சிஎஸ்கே மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் துவக்க போட்டியில் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்தது சிஎஸ்கே.

- Advertisement -

துவக்க வீரர் ருத்துராஜ் கெய்க்வாட் அடித்த பந்தை பவுண்டரியில் நின்று கொண்டிருந்த கேன் வில்லியம்சன் பிடிக்க முயற்சித்தபோது காலில் படுகாயம் ஏற்பட்டது. அவரால் எழுந்து நிற்கக்கூட முடியவில்லை. பிசியோ மருத்துவர் உடனடியாக உள்ளே வந்து அவரை அழைத்துச் சென்றனர்.

மருத்துவமனைக்கும் அழைத்துச்சென்று கேன் வில்லியம்சன் காலில் ஸ்கேன் செய்யப்பட்டது. ஸ்கேன் ரிப்போர்ட் வெளியானதில், கேன் வில்லியம்சன் அடுத்த நான்கு ஐந்து வாரங்களுக்கு கிரிக்கெட் விளையாட முடியாது என்பது உறுதியானது. ஆகையால் மீதம் இருக்கும் ஐபிஎல் தொடரிலிருந்து மொத்தமாக வெளியேறுகிறார் என்ற தகவல்கள் வந்தது.

இதனை கடந்த ஏப்ரல் இரண்டாம் தேதி குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்வாகம் உறுதி செய்தது. விரைவில் மாற்று வீரர் அறிவிக்கப்படுவார் என்றும் தெரிவித்தது.

- Advertisement -

இந்நிலையில் ஏப்ரல் மூன்றாம் தேதி கேன் வில்லியம்சன் நியூசிலாந்து செல்கிறார். செல்வதற்கு முன்னர் உருக்கமான வீடியோ ஒன்றை ரசிகர்களுக்கு வெளியிட்டிருந்தார். இதனை குஜராத் டைட்டன்ஸ் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தது.

வீடியோ:

சர்வதேச கிரிக்கெட்டில் மிகச் சிறந்த ஃபார்மில் இருந்து வந்த வில்லியம்சன், அதை ஐபிஎல் தொடரிலும எடுத்துச்சென்று சிறப்பாக விளையாடுவார் என்று மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. ஹர்திக் பாண்டியாவும் நம்பர் 3 வீரர் கேன் வில்லியம்சன் தான் என்று உறுதியாக இருந்தார்.

துரதிஷ்டவசமாக, முதல் போட்டியில் பேட்டிங் செய்வதற்கு முன்னரே படுகாயம் அடைந்து, கேன் வில்லியம்சன் வெளியேறி இருப்பது ரசிகர்களுக்கும் வேதனையை கொடுத்திருக்கிறது.