நான் ஷாருக்கான் கிட்ட அந்த விஷயத்தை சொல்லிக்கிட்டே இருந்தேன்.. நினைச்சபடியே நடந்தது – ராகுல் திவாட்டியா பேச்சு

0
278
IPL2024

நேற்று ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் கடைசி ஓவர் வரை பரபரப்பாக சென்றது. இந்த போட்டியில் கடைசிப் பந்தில் ரசித் கான் பவுண்டரி அடித்து குஜராத் டைட்டன்ஸ் அணியை வெல்ல வைத்தார். ரசித் கான் உடன் இணைந்து கடைசி கட்டத்தில் சிறப்பாக விளையாடிய ராகுல் திவாட்டியா நேற்றைய போட்டி குறித்து பேசி இருக்கிறார்.

நேற்றைய போட்டியில் டாஸ் இழந்து முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு கேப்டன் சஞ்சு சாம்சன் 36 பந்துகளில் 68 ரன்கள், ரியான் பராக் 48 பந்துகளில் 76 ரன்கள் எடுக்க, அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் மூன்று விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் சேர்த்தது.

- Advertisement -

இதைத்தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கேப்டன் கில் 44 பந்துகளில் 72 ரன்கள் எடுத்தார். கடைசி கட்டத்தில் ராகுல் திவாட்டியா 11 பந்தில் 22 ரன்கள், ரஷீத் கான் 11 பந்தில் 24 ரன்கள் எடுத்தார்கள். இவர்களின் இந்த ஆட்டத்தால் பரபரப்பான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நேற்றைய போட்டியில் வழக்கம் போல் பினிஷர் ஆக கலக்கிய ராகுல் திருவாடிய பேசும் பொழுது “நான் ஷாருக் கானுடன் இணைந்து பேட்டிங் செய்து கொண்டிருந்தேன். இன்னும் ரஷீத் கான் வரவேண்டியது இருந்தது. இரண்டு அல்லது மூன்று சிக்ஸர்கள் அடிப்பதன் மூலமாக ஆட்டத்தை வெல்ல முடியும் என்று நான் ஷாருக் கான் இடம் சொல்லி இருந்தேன். நாம் நம்மை நம்பி சூழ்நிலைக்கு ஏற்ப விளையாட வேண்டும்.

உங்கள் கைகளில் விக்கெட் இருந்தால், இரண்டு மூன்று சிக்ஸர்கள் அடிப்பது சாதாரண விஷயம். மேலும் மாறி இருக்கும் இன்றைய கிரிக்கெட் மற்றும் இம்பேக்ட் பிளேயர் வருகின்ற காரணத்தினால், மூன்று ஓவர்களில் 40 ரன்கள் என்பது அடிக்கக்கூடிய இலக்குதான்.

- Advertisement -

இதையும் படிங்க : இந்தியாவின் அடுத்த கேப்டன் ஹர்திக் பாண்டியா தான்.. பிசிசிஐ அதுக்கு தான் இப்படி பண்ணி இருக்காங்க – சித்து அதிரடி பேட்டி

எனது அணி எனக்கு சுதந்திரத்தை கொடுத்திருக்கிறது. நான் எந்த விஷயத்தில் பலமாக இருக்கின்றேனோ அதை நம்புகிறேன். பயிற்சி செய்யும்பொழுது இப்படியான சூழ்நிலைக்கு எப்படி விளையாடுவது என்றுதான் பயிற்சி செய்கிறேன். இந்தப் போட்டியில் முந்தைய இரண்டு போட்டியில் செய்த தவறுகளை செய்யாமல் இருக்க வேண்டும் என்று நினைத்தோம்” என்று கூறியிருக்கிறார்.