நேற்று நடைபெற்ற குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான 14வது ஐபிஎல் லீக் போட்டியில் குஜராத் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியை பதிவு செய்துள்ளது.
இந்த சூழ்நிலையில் பெங்களூர் அணியில் இருந்து குஜராத் அணிக்கு விளையாடும் விதம் குறித்து முகமது சிராஜ் சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
குஜராத் அணியில் சிராஜ்
கிட்டத்தட்ட 7 வருடங்களாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் ஒரு ஆஸ்தான வேகப்பந்துவீச்சாளராக திகழ்ந்தவர் முகமது சிராஜ். இருப்பினும் கடந்த ஆண்டு பெங்களூர் அணி இவரை தக்க வைக்கவில்லை. இந்த சூழ்நிலையில் கடந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் குஜராத் அணி இவரை 12.25 கோடி ரூபாய்க்கு வாங்கியது. இருப்பினும் முதல் போட்டியில் மோசமாக செயல்பட்ட முகமது சிராஜ் தனது தவறை திருத்திக் கொண்டு அடுத்த இரண்டு போட்டிகளிலும் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினார்.
இருப்பினும் தனது முன்னாள் அணியான பெங்களூர் அணிக்கு எதிராக சிறப்பாக செயல்பட்ட சிராஜ் 4 ஓவர்களில் 19 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுகள் கைப்பற்றினார். இந்த சூழ்நிலையில் பெங்களூர் அணிக்கு எதிராக விளையாடிய போது தான் எப்படி உணர்ச்சிவசப்பட்டேன் என்று சிராஜ் சில உணர்ச்சிமிகு கருத்துக்களை கூறியிருக்கிறார். மேலும் பந்துவீச்சில் தான் அடைந்த முன்னேற்றம் குறித்தும் சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டேன்
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் விளையாடிய போது நான் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டேன். ஏனென்றால் நான் ஏழு வருடங்கள் இந்த அணிக்காக விளையாடி இருக்கிறேன். ஜெர்சி சிவப்பு நிறத்தில் இருந்து இப்போது நீல நிறத்திற்கு மாறியுள்ளேன். அந்தத் தருணம் உணர்ச்சிவசமாக இருந்தது. ஆனால் நான் பந்தை கையில் வாங்கியதும் நன்றாக உணர்ந்து சிறப்பாக செயல்பட ஆரம்பித்தேன்.
இதையும் படிங்க:நான் செஞ்ச தவறை நினைத்து வெட்கப்பட்டேன்.. பேட்டிங்கில் சிறப்பாக விளையாட அந்த தவறே காரணம் – பட்லர் பேட்டி
நான் தொடர்ந்து விளையாடி வந்தேன். எனக்கு கிடைத்த இடைவெளியின் போது என் தவறுகளை திருத்தி உடல் தகுதியை மேம்படுத்த முயற்சி செய்தேன். குஜராத் அணி என்னை அழைத்துச் சென்றதும் நான் ஆஷிஸ் பாயிடம் பேசினேன். அவர் எனது பந்துவீச்சை அனுபவித்து விளையாடச் சொன்னார். மேலும் இஷாந்த் சர்மா பாய் எந்த லைன் லென்த்தில் பந்து வீச வேண்டும் என்று எனக்கு சில விஷயங்கள் கூறினார். மேலும் போட்டியின் போது நம்பிக்கையான மனநிலையில் இருக்க வேண்டியது அவசியம்” என்று சிராஜ் கூறி இருக்கிறார்.






