ஐபிஎல் 2024 : முகமது சமியின் இடத்துக்கு.. குஜராத் டைட்டன்ஸ் தமிழக ரஞ்சி வீரரை வாங்கியது

0
706
Shami

இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் ஹர்திக் பாண்டியா காயம் அடைந்த காரணத்தினால், இந்திய பவுலிங் யூனிட்டை மாற்றி அமைத்ததில் முகமது சமிக்கு தொடர்ந்து விளையாடும் வாய்ப்பு கிடைத்தது.

முகமது சமி இந்திய பிளேயிங் லெவனில் வந்ததும் இந்திய அணியின் செயல்பாட்டு தீவிரம் மிக வீரியமாக மாறியது. சந்தித்த எல்லா அணிகளையும் வெகு எளிதாக தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்கள். ஆனால் எதிர்பாராத விதமாக இறுதிப்போட்டியில் தோற்று கோப்பையை இழந்தார்கள்.

- Advertisement -

இந்த உலகக் கோப்பையின் போது கணுக்காலில் ஏற்பட்டிருந்த காயத்திற்கு சிகிச்சை செய்வதற்கான நேரம் இல்லாததால், காயத்திற்கு ஊசி போட்டுக் கொண்டு முகமது சாமி தொடர்ந்து உலகக் கோப்பையில் இந்திய அணிக்காக விளையாடினார்.

இதன் காரணமாக உலகக் கோப்பை தொடர் முடிந்து அவரது காயம் பெரிதானது. மேற்கொண்டு இந்திய தேசிய கிரிக்கெட் அகாடமி மருத்துவர்கள் மேற்பார்வையில் இருந்து வந்த அவருக்கு குணமாகவில்லை. இதைத்தொடர்ந்து அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருந்ததால், அறுவை சிகிச்சை செய்து தற்பொழுது ஓய்வில் இருந்த வருகிறார்.

- Advertisement -

குஜராத் டைட்டன்ஸ் அணியில் ஏற்படுத்திய தாக்கம்

பிசிசிஐ ஐபிஎல் முன்கூட்டியே முகமது சமி ஐபிஎல் தொடரில் விளையாட மாட்டார் என்று அறிவித்துவிட்டது. குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ஐபிஎல் தொடரில் பவுலிங் யூனிட்டில் முகமது சமி மிக முக்கிய ஆயுதமாக இருந்தார்.அவரது பந்துவீச்சை அடிக்க முடியாத காரணத்தினால், அடுத்து ரஷித் கான் பந்துவீச்சை அடித்து ஆட வேண்டிய சூழ்நிலை உருவானது. இதனால் மீண்டும் ஐபிஎல் தொடரில் ரஷித் கான் நிறைய விக்கெட்களை பெற்றார்.

இப்படி பெரிய தாக்கத்தை உண்டாக்கிய முகமது சமி காயத்தால் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு விளையாட முடியாததால், அவருடைய இடத்திற்கு தமிழக அணிக்கு ரஞ்சி கிரிக்கெட்டில் இடம் பெற்று விளையாடும் கேரளாவைச் சேர்ந்த சந்தீப் வாரியர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இவரது அடிப்படை விலையான 50 லட்சம் ரூபாய்க்கு இவரை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.

இதையும் படிங்க : எங்க எல்லாருக்கும் அந்த பிரச்சனை வந்துச்சு.. ஆனா தோனிக்கு வரல.. முன்பே சரி செய்தார் – ஜாகிர் கான் பேச்சு

குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன் அணிக்கு சென்று இருக்கும் நிலையில், அணியின் முதன்மை பந்துவீச்சாளர் முகமது சமியும் இல்லாதது, புதிய கேப்டனான சுப்மன் கில்லுக்கு பெரிய நெருக்கடியை உண்டாக்கி இருக்கிறது. இவர்கள் மீண்டும் ஒரு அணியாக இணைந்து எப்படி செயல்படுவார்கள் என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

- Advertisement -