மகளிர் ஐபிஎல் சீசன் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது ஆட்டத்தில் யூபி வாரியர்ஸ் மற்றும் குஜராத் ஜெயின்ஸ் அணிகள் மோதி விளையாடின.
இதில் சிறப்பாக விளையாடிய குஜராத் ஜெயின்ஸ் மகளிர் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சிறப்பான வெற்றியை பதிவு செய்துள்ளது.
மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் சீசன்
வதோதரா மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இதன்படி யூபி வாரியர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய களம் இறங்கியது. யூபி அணியின் தொடக்க ஜோடி முதல் விக்கெட்டுக்கு இரண்டு ஓவர்களில் 22 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறியது. இதில் தொடக்க வீராங்கனை நவ்கிரே 15 ரன்னில் நடையை கட்டினார். மற்றொரு தொடக்க வீராங்கனை வ்ருந்தா தினேஷ் 6 ரன்னில் வெளியேறினார்.
அதற்குப் பின்னர் களம் இறங்கிய விக்கெட் கீப்பர் உமா செத்ரி மற்றும் கேப்டன் தீப்தி சர்மா ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இதில் உமா செத்ரி 24 ரன்னில் ஆட்டம் இழக்க, கேப்டன் தீப்தி சர்மா 27 பந்துகளில் 6 பவுண்டரியுடன் 39 ரன்னில் ஆட்டம் இழந்தார். அதற்குப் பின்னர் களம் இறங்கிய வீராங்கனைகள் யாரும் பெரிதாக ரன்கள் எடுக்காத நிலையில், யூபி வாரியர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் குவித்தது. இதில் குஜராத் அணி தரப்பில் பிரியா மிஸ்ரா அதிகபட்சமாக 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
குஜராத் அணி சிறப்பான வெற்றி
அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி குஜராத் அணி களம் இறங்கியது. இதில் தொடக்க வீராங்கனை பெத் மூனே தான் சந்தித்த முதல் பந்திலேயே டக் அவுட் ஆகி வெளியேறினார். அதற்கு பிறகு களம் இறங்கிய மூன்றாவது வரிசை வீராங்கனை ஹேமலதா மூன்றாவது பந்தில் அவரும் டக் அவுட் ஆகி ஆட்டம் இழந்தார். மற்றொரு தொடக்க வீராங்கனை லாரா 24 பந்துகளை எதிர் கொண்டு இரண்டு போர் மற்றும் ஒரு சிக்ஸ் என 22 ரன்கள் குவித்தார்.
இதையும் படிங்க:இன்னொரு அவமானம் வரவே கூடாது.. ரோகித்துக்கு கம்பீர் போட்ட ஸ்ட்ரிக்ட் ரூல்.. சாம்பியன்ஸ் டிராபி தொடர்
இதில் மிடில் வரிசை வீராங்கனை கார்டனர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் 32 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு 5 பௌண்டரிகள் மற்றும் 3 சிக்ஸ் என 52 ரன்கள் குவித்து குஜராத் அணியின் வெற்றியை உறுதி செய்தார். அவருக்கு பக்கபலமாக ஹர்லின் டியோல் 34 ரன்கள் மற்றும் டேன்றா டோட்டின் 18 பந்துகளில் 33 ரன்கள் குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலமாக குஜராத் அணி 18 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து 144 ரன்கள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியை பதிவு செய்தது.






