இன்னொரு அவமானம் வரவே கூடாது.. ரோகித்துக்கு கம்பீர் போட்ட ஸ்ட்ரிக்ட் ரூல்.. சாம்பியன்ஸ் டிராபி தொடர்

0
602

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடி முடித்த நிலையில் அடுத்ததாக சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடுவதற்கு துபாய்க்கு சென்றுள்ளது.

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் தலைமை பயிற்ச்சியாளர் கௌதம் கம்பீர் ரோஹித் சர்மாவிற்கு ஒரு முக்கியமான ஆர்டர் போட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

- Advertisement -

சாம்பியன்ஸ் ட்ராஃபி கிரிக்கெட் தொடர்

இந்திய கிரிக்கெட் அணி இதற்கு முன்னதாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி மூன்று போட்டிகளில் தோல்வி அடைந்து மோசமாக தொடரை இழந்தது. அந்த சூழ்நிலையில் இந்திய அணியின் ட்ரெஸ்ஸிங் ரூமில் பேசிய விஷயங்கள் இளம் வீரர்கள் மூலமாக ஊடகங்களுக்கு வெளியே தெரிந்த நிலையில் அது மிகப்பெரிய சர்ச்சையானது. இது குறித்த இந்திய முன்னாள் வீரர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்தார்கள்.

இந்த சூழ்நிலையில் தற்போது சாம்பியன் டிராபி கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ள நிலையில் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் துபாய்க்கு கிளம்புவதற்கு முன்பாக மும்பையில் உள்ள ஒரு ஹோட்டலில் வீரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சாம்பியன்ஸ் ட்ராஃபி தொடரின் போது இந்திய டிரெஸ்ஸிங் ரூமில் நடக்கும் விஷயங்கள் வெளியே தெரியக்கூடாது என கம்பீர் கூறியிருப்பதாக செய்திகள் கசிந்துள்ளது.

- Advertisement -

வெளியே தெரியக்கூடாது

இதுகுறித்து வெளிவந்துள்ள அறிக்கையின் படி “துபாய் வருவதற்கு முன்பாக இந்திய வீரர்கள் அனைவரும் மும்பையில் உள்ள ஒரு ஹோட்டலில் கூறினார்கள். அங்குள்ள வட்டாரங்களின்படி கம்பீர் கூறிய கருத்துக்கள் அனைத்தும், இந்திய ட்ரெஸ்ஸிங் ரூமில் பேசக்கூடிய விஷயங்கள் சிறிது கூட வெளியே தெரியக்கூடாது என்பதன் அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் சர்ச்சைக்குப் பிறகு இந்த மீட்டிங் தேவையான ஒன்றாக மாறிவிட்டது.

இதையும் படிங்க:இத சொன்னா வருந்தணும்.. இந்திய அணியின் நிலைமைய பாத்தா பாக் அணிதான் ஜெயிக்கும் – பசித் அலி துணிச்சல் பேட்டி

துபாயில் களமிறங்கியவுடன் ஞாயிறு மதியம் ஒரு மணி முதல் இந்திய வீரர்கள் தங்களது பயிற்சிகளை மேற்கொள்ள உள்ளார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வருகிற 20-ம் தேதி இந்திய அணி பங்களாதேஷ் அணியோடு தனது முதல் போட்டியை விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதில் முக்கிய போட்டியான இந்திய மூன்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடும் போட்டி வருகிற 23ஆம் தேதி நடைபெற உள்ளது.

- Advertisement -