இந்திய கிரிக்கெட்

மில்லர் 5வது பந்தில் ரன் எடுக்காதப்ப இதைத்தான் நினைச்சேன்.. ஒவ்வொரு போட்டியும் இப்படியே போகுது – கில் பேச்சு

நேற்று டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி பரபரப்பான போட்டியில் ஒரே ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதுகுறித்து குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் பேசியிருக்கிறார்.

- Advertisement -

இந்த போட்டியில் கடைசி இரண்டு பந்துகளுக்கு இரண்டு ரன்கள் தேவைப்பட்ட நிலையில், இருபதாவது ஓவரின் ஐந்தாவது பந்தில் டேவிட் மில்லர் ஒரு எடுப்பதற்கான வாய்ப்பை மறுத்து, கடைசி பந்தையும் அடிக்காமல் தவறவிட்டார். இந்தப் பந்தில் ஓடிய குல்தீப் ரன் அவுட் ஆனார். இதனால் போட்டி டிரா ஆகி சூப்பர் ஓவருக்கு கூட செல்லாமல் டெல்லி தோல்வி அடைந்தது.

விழிப்புணர்வே கிடையாது

எப்பொழுதும் போட்டியின் வெற்றி வாய்ப்பை கைகளில் வைத்துக் கொண்டே இருக்க வேண்டும். போட்டியை டிரா செய்ய வாய்ப்பு கிடைத்தால் முதலில் அதை செய்து விட வேண்டும். பிறகு வெற்றிக்கான ரன் எடுப்பதை குறித்து பார்க்க வேண்டும். இதுதான் கிரிக்கெட்டில் அடிப்படை விதி. ஆனால் டேவிட் மில்லர் ஆட்ட விழிப்புணர்வே இல்லாமல் நடந்து கொண்டது விமர்சனத்தை உருவாக்கியுள்ளது.

இது குறித்து சுப்மன் கில் பேசும்போது “நாங்கள் விளையாடிய மூன்று போட்டிகளும் கடைசி ஓவர் வரையில் சென்று உள்ளன. இந்த போட்டியில் வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. டேவிட் மில்லர் ஐந்தாவது பந்தில் ரன் எடுக்கும் வாய்ப்பை வேண்டாம் என்று சொன்னபோது, எங்களுக்கு இன்னும் வெல்வதற்கான வாய்ப்பு உள்ளது என்ற நம்பிக்கை வந்தது”

- Advertisement -

ஆடுகளம் இப்படித்தான் இருந்தது

“கடைசி ஓவர் வீசும் போது பிரசித் கிருஷ்ணாவிடம் நான் பெரியதாக எதுவும் பேசவில்லை. இந்த ஆடுகளத்தை பொருத்தவரையில் வேகமாக வீசுவதை விட மெதுவாக வீசுவது தான் சரியாக இருந்தது. எனவே மெதுவாக வீசினால் பவுண்டரி அடிக்க முடியாது என்று நாங்கள் பேசிக் கொண்டோம்”

இதையும் படிங்க : சிஎஸ்கேவை ஏமாற்றிய டெல்லி.. மில்லர் செய்த மெகா தப்பு.. 1 ரன்னில் பறிபோன வெற்றி.. குஜராத் நிம்மதி

“நான் பீல்டிங்கில் ஒரு ஓவர் த்ரோ அடித்தேன் அது ஐந்து ரன்கள் போனது. இப்படி ஒரு ரன் வித்தியாசத்தில் வெல்லும் போட்டியில் இப்படியான ரன்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்த ஆடுகளத்தில் நாங்கள் 15 ரன்கள் கூடுதலாக எடுத்து இருக்கிறோம் என்று நினைத்தோம். ஆனாலும் போட்டி மிகவும் பரபரப்பாக இருந்தது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts