எங்களை இளக்காரமா நினைச்சாங்க.. இப்ப நாங்க தான் ஃபர்ஸ்ட்.. எங்க வெற்றிக்கு முக்கிய காரணம் இதுதான் – கில் பேட்டி

0
43
Gill

நேற்று ஹைதராபாத் அணிக்கு எதிராக குஜராத் அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியது. இது குறித்து கேப்டன் கில் பேட்டி அளித்திருக்கிறார்.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி ஐந்து விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அடுத்து விளையாடி 86 ரன் மட்டுமே எடுத்து சுருண்டு 82 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

- Advertisement -

குஜராத் முன்னேற்றம்

தற்போது குஜராத் அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் 14 புள்ளிகள் உடன் இருக்கிறது. 10 அணிகளில் அந்த அணியின் பேட்டிங் யூனிட் கொஞ்சம் பலவீனமாகவும் அதே சமயத்தில் பெரிய அதிரடியான வீரர்கள் இல்லாமலும் இருந்து வருகிறது. ஆனாலும் புள்ளி பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறி விட்டது.

மிக முக்கியமாக சிறப்பான வேகப்பந்துவீச்சாளர்களை நம்பி அந்த அணி அமைக்கப்பட்டுள்ளது. ஜேசன் ஹோல்டர் பிளேயிங் லெவனில் வந்ததும் குஜராத் அணியின் வேகம் மிகவும் அதிகரித்துள்ளது. தற்போது அந்த அணியின் முன்னேற்றத்திற்கு அவர் முக்கியமானவராக இருக்கிறார்.

- Advertisement -

நாங்கள் இப்படிப்பட்டவர்கள் இல்லை

இது குறித்து கில் பேசும்போது ” பொதுவாக நாங்கள் இப்படித்தான் விளையாடுவோம் என்கின்ற டெம்ப்லேட் எதுவும் இல்லை. நாங்கள் மெதுவாக பேட்டிங் செய்கின்ற ஒரு அணி கிடையாது. நாங்கள் ஆடுகளத்தை பார்த்து எவ்வளவு ரன் தேவையோ அதற்கு தகுந்தது போல்தான் விளையாடுகிறோம். இந்த போட்டியில் ஆடுகளத்தில் 170 ரன்கள் எடுத்தாலே போதும் என்று எங்களுக்கு தெரியும். ஆனால் அதுவே கடினமாக இருந்தது. சாய் சுதர்ஷன் மற்றும் வாஷிங்டன் பேட்டிங் செய்த விதம் அபாரமானது”

இதையும் படிங்க : யாரும் செய்யாதது.. எங்க முதல் 4 பேட்ஸ்மேன்கள் பெரிய விஷயத்தை பண்ணியிருக்காங்க.. இந்த தோல்வி எங்களை பாதிக்காது – பேட் கம்மின்ஸ் பேச்சு

“ஜேசன் ஹோல்டரை அணியில் சேர்த்தது மிகவும் முக்கியமான விஷயமாக எங்களுக்கு அமைந்துள்ளது. அவர் மிகவும் அனுபவம் வாய்ந்த வீரர். அவர் வீசும் லென்த் ஒரே மாதிரி இருக்கிறது. அவர் தொடர்ந்து அதையே வீசுகிறார். ஒவ்வொரு முறையும் அவர் தொடர்ந்து நான்கு ஓவர்கள் பேசுவது இந்த வெப்பமான நிலையில் எளிதான விஷயம் கிடையாது. ஆனால் அவர் அதைத் தொடர்ந்து செய்து வருகிறார்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -