இந்திய கிரிக்கெட்

ரோகித் கோலியை வீரர்களை நீக்க.. பிசிசிஐ இந்த மாதிரி ஒரு வேலையை செய்யணும் – கிரேக் சேப்பல் பேட்டி

இந்திய நட்சத்திர பேட்ஸ்மேன்கள் விராட் கோலி மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா போன்றோர் சரியாக விளையாடாவிட்டால் அவர்களிடம் கடினமான நேரத்தில் பேசுவதற்கு ஒரு முக்கியமான வேலையை பிசிசிஐ செய்ய வேண்டும் என ஆஸ்திரேலியா லெஜெண்ட் கிரேக் சேப்பல் கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே மூன்றாவது டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் தொடங்க இருக்கிறது. இந்த நிலையில் பும்ராவின் காயம் மற்றும் விராட் கோலி, ரோகித் சர்மாவின் மோசமான பேட்டிங் ஃபார்ம் முக்கிய பேஸ் பொருளாக மாறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

ரகானே புஜாராவுக்கு நடந்தது

கடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிளின் இறுதிப்போட்டியில் புஜாரா மற்றும் ரகானேவுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் அதற்கு அடுத்த புதிய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிளில் புஜாரா திடீரென கழட்டி விடப்பட்டார். ரகானே திடீரென அணியின் துணை கேப்டனாக கொண்டுவரப்பட்டார்.

இந்த நிலையில் ரகானே வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் சொதப்ப, உடனடியாக நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிளின் துவக்கத்தில் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டு இருந்தாலும் கூட நீக்கப்பட்டு விட்டார். இந்த நிலையில் அடுத்த துவங்க இருக்கும் புதிய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிளின் ஆரம்பத்திலேயே ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் நீக்கப்படுவது நடைபெறலாம் என்று கூறப்படுகிறது. குறிப்பாக ரோகித் சர்மா இடத்துக்கு பெரிய ஆபத்து இருக்கிறது.

- Advertisement -

பிசிசிஐ இதைச் செய்ய வேண்டும்

இதுகுறித்து ஆஸ்திரேலியா லெஜெண்ட் கிரேக் சேப்பல் பேசும் பொழுது “ஒரு வீரர் உச்சத்தில் இருக்கிறாரா இல்லையா? என்பது அந்த வீரருக்கு நன்றாகவே தெரியும். ஆனால் பெரிய வீரர்கள் பொதுவாகவே நிறைய போட்டிகள் விளையாடுவதை விரும்புகிறார்கள். அப்படி அவர்கள் நினைப்பது தவறும் கிடையாது. அவர்களுக்கு எல்லா உரிமையும் இருக்கிறது”

“எனவேதான் இந்த மாதிரியான நேரத்தில் கடினமான முடிவுகளை எடுப்பதற்கு உங்களுக்கு நல்ல தேர்வு கொள்கைகள் மற்றும் தேர்வுக்குழு தேவையாக இருக்கிறது. இந்த வீரர்கள் இப்படிப்பட்ட முடிவுகளை எடுக்கப் போவதில்லை. நல்ல சம்பளம் கிடைக்கும் வேலையை விட்டு யார் போவார்கள்? எனவேதான் இந்த இடத்தில் இப்படியான முடிவுகளை எடுக்க ஒரு குழு தேவையாக இருக்கிறது”

இதையும் படிங்க :இன்று விராட் கோலி.. பயிற்சியில் செய்த 3 முக்கிய மாற்றங்கள்.. இந்திய ரசிகர்கள் மகிழ்ச்சி.. வெளியான தகவல்கள்

“இது கடினமானது. தேர்வாளர்கள் சரியானவர்களை தேர்வு செய்ய வேண்டும். பெரிய வீரர்களிடம் கடினமான உரையாடல்களை நடத்த தயாரானவர்கள் அங்கு இருக்க வேண்டும்.இந்த மட்டத்தில் விளையாடும் ஒவ்வொரு வீரர்களுக்கும் உயர்வு தாழ்வு இருக்கும். அவர்கள் அதிக போட்டிகளில் விளையாட விரும்புகிறார்கள். எனவே தான் நான் இந்த யோசனையை சொல்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts