ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான பயிற்சியில் விராட் கோலி மூன்று முக்கிய மாற்றங்களை செய்திருக்கிறார். இந்த செய்தி இந்திய ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்திருக்கிறது.
நாளை மறுநாள் இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைபெற இருக்கிறது. இந்த போட்டி இந்திய நேரப்படி அதிகாலை 5.30 மணிக்கு பிரிஸ்பேன் காபா மைதானத்தில் துவங்குகிறது.
கவலை தந்த விராத் பேட்டிங் அணுகுமுறை
விராட் கோலி கடந்த சில ஆண்டுகளாகவே ஆப் ஸ்டெம்பில் வெளியில் செல்லும் பந்துகளை விளையாட சென்று ஆட்டம் இழந்து வருவது கவலை தருவதாக இருக்கிறது. நடந்து முடிந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இரண்டு முறையும் அப்படியே ஆட்டம் இழந்து இருந்தார்.
மேலும் விராட் கோலி வேகப்பந்துவீச்சில் எப்பொழுதும் முன் காலில் பிரன்ட்-புட்டில் விளையாடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். இதன் காரணமாகவே பந்தில் கொஞ்சம் கூடுதல் பவுன்ஸ் இருந்தால் எட்ஜ் எடுக்கிறது. இந்த அணுகு முறையை அவர் மாற்றிக்கொள்ள வேண்டும் என கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக சஞ்சய் மஞ்சுரேக்கர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
தற்போது விராட் செய்துள்ள மாற்றங்கள்
தற்போது விராட் கோலி பயிற்சியில் ஒன்றரை மணி நேரம் அமர்வில் கலந்து கொண்டார். இதில் மிக முக்கியமாக ஆப் ஸ்டெம்புக்கு வெளியில் செல்லும் பந்துகளை விட்டு விளையாட பயிற்சி செய்தார். மேலும் பல பந்துகளை வெளியில் விட்டு விளையாடவும் செய்தார்.
இதையும் படிங்க :3வது ஆஸி டெஸ்ட்.. உத்தேச இந்திய பிளேயிங் XI.. 2 மாற்றங்கள் நடக்குமா.. பும்ரா ஆடுவாரா?
இத்துடன் விராட் கோலி பேக்-புட் சென்று விளையாடுவதிலும் அதிகம் கவனம் செலுத்தினார். இதில் கட் மற்றும் ஃபுல் ஷாட் விளையாடினார். அதிக பவுன்ஸ் கொண்ட ஆஸ்திரேலியா ஆடுகாலங்களில் பேக்-புட்டில் விளையாடுவது மிகவும் முக்கியமான ஒன்று. தற்போது விராட் கோலி ஆப்-ஸ்டெம்புக்கு வெளியில் இருக்கும் பந்தை விடுவது, பேக்-புட்டில் விளையாட முயற்சி செய்வது, மேலும் கட் மற்றும் ஃபுல் ஷாட் ஆடுவது இந்திய ரசிகர்களை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது!






