நடுங்கும் அளவுக்கு இந்த பிட்சில் பேய் எதுவும் இல்லை.. கவாஜா செட் செய்துகொடுத்து அவுட்டானார்; என்னால் பினிஷ் செய்யமுடியும் என நம்பினேன் – அசால்ட்டாக பேசிய கேப்டன் கம்மின்ஸ்!

0
895

“பயப்படும் அளவிற்கு பிட்ச்சில் பேய் எதுவும் இல்லை. நன்றாக பேட்டிங் செய்ய முடியும் என்று நம்பினேன். வெற்றி பெற்றோம்.” என பேட்டியளித்தார் பாட் கம்மின்ஸ்.

ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்டில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணிக்கு ரூட் 118 ரன்கள் அடிக்க, 393 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸ் முடிவில் 386 ரன்கள் அடித்தது. கவாஜா 141 ரன்கள், அலெக்ஸ் கேரி 66 ரன்கள் அடித்தனர்.

- Advertisement -

இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து அணி 273 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. முடிவில் 280 ரன்கள் முன்னிலை பெற்றது. இலக்கை துரத்திய ஆஸி., அணிக்கு கவாஜா 65 ரன்கள் அடித்து அவுட்டானார்.

227 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்திருந்தது ஆஸ்திரேலிய அணி, வெற்றிபெற இன்னும் 54 ரன்கள் தேவைப்பட்டது. இக்கட்டான சூழலில் பொறுப்புடன் விளையாடி 44 ரன்கள் அடித்தார் கம்மின்ஸ். இறுதியில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பரபரப்பு வெற்றியை பெற்றது.

போட்டி முடிந்தபின் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் கம்மின்ஸ் பேசுகையில், ” இந்த பிட்சில் பயப்படும் அளவிற்க்கு பேய், பிசாசு எதுவும் இல்லை. கவாஜா, கேரி சிறப்பாக விளையாடிக்கொடுத்தார்கள். இரு அணிகளும் வெவ்வேறு அணுகுமுறையில் விளையாடினோம். எது பெஸ்ட் என்பதை என்னால் சொல்ல இயலாது. ஆனால் ரசிகர்களுக்கு நல்ல ட்ரீட்டாக இருந்திருக்கும்.

- Advertisement -

கவாஜா இந்த போட்டி முழுவதும் அவரால் என்ன பெஸ்ட் கொடுக்க முடியுமோ அதை செய்தார். கடந்த இரண்டு வருடங்களாகவே தூணாக இருக்கிறார். இங்கிலாந்தில் சரியாக செயல்பட முடியவில்லை எனும் வருத்தத்தில் இருந்த அவர், இப்போது ஆடியவிதத்திற்கு நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

நேதன் லயன் போன்ற ஒருவர் அணியில் இருப்பது கேப்டன்களுக்கு ஒரு கனவு போன்றது. அணிக்கு எப்போதும் பக்கபலமாக இருந்துள்ளார். இரண்டு இன்னிங்சிலும் பவுலிங்கில் ஒரு பக்கம் விக்கெட்டுகளை எடுத்துக்கொண்டே இருந்தார். பேட்டிங்கில் அவர் கடைசியில் வந்து தேவையான ரன்களை அடுத்துகொடுத்தபோது எனக்கு அழுத்தம் குறைந்தது. அவர் ஒரு சூப்பர் ஸ்டார். அமைதியாக, அவரது வேலையை செய்து முடித்திடுவார். அவர் இருக்கும்போது எனக்கு பெரிய தலைவலியே இருக்காது.” என்றார் கம்மின்ஸ்.