சிஎஸ்கே அணி, ரசிகர்களுக்கு நல்ல செய்தி; திரும்ப வரும் நட்சத்திர வீரர்!

0
3504
CSK

கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தன்னுடைய நம்பகமான ராசிகரமான வீரர்களான தீபக் சகர் மற்றும் சர்துல் தாக்கூர் இருவரில் யாரை வாங்குவார்கள் என்கின்ற பெரிய எதிர்பார்ப்பு இருந்தது!

இந்த நிலையில் சென்னை அணி தீபக் சகருக்கு ஏலத்தில் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு சென்றது. ஏலத்தில் ஒரு கட்டத்தில் 10 கோடியை தொட்ட பின்பு சென்னை அணி விலகிக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்பட்ட பொழுது, அங்கிருந்து 15 கோடிக்கு சென்று தீபக் சகரை வாங்கியது!

- Advertisement -

மும்பையை ஒட்டி உள்ள நான்கு மைதானங்களில் நடைபெற்ற கடந்த ஐபிஎல் சீசனில் வேகப்பந்து வீச்சும் ஸ்விங்கும் அபாரமாக எடுபட்டது. இப்படியான நிலையில் சிறப்பான ஸ்விங் வேகப்பந்துவீச்சாளரான தீபக் சகர் காயத்தால் ஒரு போட்டியில் கூட பங்கேற்க முடியாத நிலை உருவானது. இந்தக் காரணத்தால் சென்னை அணிக்கு சரியான வேகப்பந்துவீச்சு அமையாததால், புள்ளி பட்டியலில் ஒன்பதாவது இடத்தை பிடித்து பரிதாபமாக வெளியேறியது.

தற்பொழுது தீபக் சகர் முழுமையாக காயத்தில் இருந்து குணமடைந்து விட்டதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இது குறித்து அவர் கூறும் பொழுது ” கடந்த இரண்டு மூன்று மாதங்களாக நான் என்னுடைய உடற் தகுதிக்காக மிக கடினமாக உழைத்தேன். நான் தற்பொழுது முழுமையான உடற் தகுதியோடு இருக்கிறேன். ஐபிஎல் தொடருக்கு மிகச் சிறப்பாக தயாராகி வருகிறேன். எனக்கு இரண்டு பெரிய காயங்கள் ஏற்பட்டது. ஒன்று ஸ்ட்ரெஸ் பிராக்சர் மற்றொன்று குவாட் கிரேடு 3 டீயர். இரண்டுமே மிகப்பெரிய காயங்கள். இதனால் பல மாதங்கள் விளையாட முடியாமல் போகும். இப்படியான காயத்திற்கு பிறகு திரும்ப வருவதற்கு நேரம் எடுக்கும் குறிப்பாக வேகப்பந்துவீச்சாளர்களுக்கு!” என்று கூறியுள்ளார்!

மேலும் தொடர்ந்து பேசிய அவர்
” நான் ஒரு பேட்ஸ்மேன் ஆக இருந்திருந்தால் நான் சீக்கிரத்தில் திரும்பி வந்து நிறைய விளையாடி இருக்க முடியும். ஆனால் நான் ஒரு வேகப்பந்துவீச்சாளர். ஸ்ட்ரெஸ் பிராக்சர் காயம் உண்டான பிறகு ஒரு வேகப்பந்து வீச்சாளர் மீண்டு வந்து செயலாற்றுவதற்கு நிறைய நேரங்கள் எடுக்கும். இப்படியான காயங்களில் இருந்து வெளியே வர சிரமப்படும் பல வேகபந்துவீச்சாளர்களை நம்மால் வெளியில் பார்க்க முடியும்!” என்று கூறியிருக்கிறார்!

- Advertisement -

மேலும் இந்திய அணியில் வாய்ப்பு பற்றி பேசிய அவர் ” நான் என் வாழ்நாளில் மொத்தமும் ஒரு விதியின் படி வாழ்ந்தவன். நான் விரும்பும் படி பந்து வீச முடிந்தால் நான் விரும்பும் படி பேட்டிங் செய்ய முடிந்தால் நான் இந்திய அணியில் இடம் பெறுவதை தடுக்க முடியாது. அதுதான் என் வாழ்க்கையை தொடங்கிய அடிப்படை விதி. யார் விளையாடுகிறார்கள்? யார் விளையாடவில்லை என்பது பற்றி எனக்கு கவலை இல்லை. என்னுடைய நோக்கம் நான் முழுமையான உடற் தகுதி பெற்று பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கில் நூறு சதவீதம் சிறப்பாக செயல்பட வேண்டும் அப்படி செய்தால் எனக்கு வாய்ப்பு எளிதாக கிடைக்கும்” என்று கூறியிருக்கிறார்!