கடந்த முறை கூட நல்ல அணிதான் ஆனால்… கபில்தேவ் அதிரடி கருத்து

0
72
Kapil dev

15வது ஆசிய கோப்பை தொடர் நேற்று துபாய் சர்வதேச மைதானத்தில் இலங்கை ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியின் மூலம் துவங்கப்பட்டது. இந்தப் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி இலங்கை அணியை அடித்து நொறுக்கி வீழ்த்தி ஏறக்குறைய முதல் சுற்று வாய்ப்பை தாண்டி இரண்டாம் சுற்றுக்கும் நுழைந்து விட்டது என்றே கூறலாம்!

ஆசியக் கோப்பை தொடரின் இரண்டாவது நாளான ஞாயிற்றுக்கிழமை இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் மிகப்பெரிய கிரிக்கெட் போட்டி ரசிகர்களுக்காக இரவு ஏழு முப்பது மணிக்கு துவங்க இருக்கிறது. போட்டியானது இரு நாட்டு ரசிகர்களை தாண்டி உலக கிரிக்கெட் மத்தியில் மிகப்பெரிய முக்கியத்துவத்தைப் பெற்று இருக்கிறது.

- Advertisement -

ஆசியக் கோப்பை தொடர் குறித்து இயலும் பேச்சுகள் எல்லாமே போய் முடியும் இடமாக இந்தியா-பாகிஸ்தான் மோதிக்கொள்ளும் போட்டியை பற்றியும் இந்த இரு அணிகளின் பலம் மற்றும் பலவீனம் பற்றித்தான் இருக்கிறது. வரை ஆசிய கோப்பை குறித்து அலசப்பட்ட முன்னாள் வீரர்கள் கருத்துகளில் எல்லாமே இந்தியா பாகிஸ்தான் அணிகள் தான் இருந்தது இவைகள் மோதிக்கொள்ளும் போட்டிகள் பற்றித்தான் இருந்தது. இந்த அளவில் எடுத்து வைத்துப் பார்த்தால் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி எவ்வளவு முக்கியத்துவம் பெற்றதாக உலக கிரிக்கெட்டில் இருக்கிறது என்று நாம் புரிந்து கொள்ளலாம்.

தற்போது இந்திய அணிக்காக முதன்முதலில் உலக கோப்பையை பெற்றுக் கொடுத்த தலைசிறந்த ஆல்ரவுண்டர் முன்னாள் வீரர் கபில்தேவ் அவர்கள் இந்திய அணி குறித்தும் இந்தியா-பாகிஸ்தான் மோதிக்கொள்ளும் போட்டி குறித்து வெளிப்படையான தனது கருத்தை பகிர்ந்து இருக்கிறார்.

இதுபற்றி கபில்தேவ் கூறும்பொழுது ” டி20 போட்டியில் எதையும் உறுதியாக சொல்ல முடியாது. ஒருநாள் போட்டிகளில் ஓரளவுக்கு கணிக்கலாம் ஆனால் டி20 போட்டிகளுக்கு அப்படி கணிக்க முடியாது. எங்கள் அணி வலிமையாக உள்ளது இந்த அணிக்கு அனுபவமும் உள்ளது. ஆனால் கடந்த முறையும் நாங்கள் இப்படித்தான் இருந்தோம். ஆனால் முடிவு கசப்பாக இருந்தது. இதில் கருத்து சொல்வது கடினம்” என்று தெரிவித்தார்.

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய கபில்தேவ் ” இன்னும் நீங்கள் புள்ளி விவரங்கள் மற்றும் வீரர்களை எடுத்து வைத்து பார்த்தால்இந்திய அணி மிகச் சிறப்பாக இருக்கிறது. ஆனால் இதெல்லாம் ஒரு அணி அந்த நாளில் அந்த நேரத்தில் எப்படி செயல்படுகிறது என்பதைப் பொறுத்து தான் முடிவுகள் அமையும் ” அவர் தெரிவித்தார்.

இதையொட்டி பேசி உள்ள இந்திய கேப்டன் ரோகித் சர்மா ” நாங்கள் எங்கள் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்கிறோம். எங்களுக்கு ஒரு புதிய தொடக்கம் ஆகும். வெளிப்படையாக நாங்கள் நிறைய டி20 போட்டிகளில் சமீபத்தில் ஆடி வருகிறோம். அக்டோபரில் நடந்த ஒரு விஷயம் பழைய விஷயம். நாங்கள் அது குறித்து யோசிக்க மாட்டோம்” என்று கூறியிருக்கிறார்.