“அவர் பேரை மக்கள் கத்தினால் உங்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்” – உம்ரான் மாலிக் பற்றி இளம் வீரர் சுவாரசிய தகவல்!

0
1533
Umran malik

ஹர்திக் பாண்டியா தலைமையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி உள்நாட்டில் இலங்கை அணியை எதிர்த்து விளையாடி வருகிறது!

இதன் முதல் போட்டி நேற்று முன்தினம் மும்பை வான்கடே மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் இந்திய அணி இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது!

- Advertisement -

இந்தப் போட்டியில் ஜம்மு காஷ்மீர் எக்ஸ்பிரஸ் உம்ரான் மாலிக் புதிய சாதனை ஒன்றை படைத்தார். அதாவது இந்திய வேகப்பந்துவீச்சாளர்களில் அதிக வேகம் வீசியவர் என்ற சாதனையை படைத்தார். இந்த ஆட்டத்தில் அவர் மணிக்கு 155 கிலோ மீட்டர் வேகத்தில் வீசி இந்த சாதனையை புரிந்தார்!

உம்ரான் மாலிக் பற்றி ஜம்மு காஷ்மீர் வீரரும், தற்போது உம்ரன் மாலிக் ஐபிஎல் தொடரில் விளையாடும் ஹைதராபாத் அணிக்கு 2.60 கோடிக்கு வாங்கப்பட்டுள்ள லெக் ஸ்பின் ஆல்ரவுண்டர் விவரன்ட் சர்மா சில சுவாரசிய கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

அவர் கூறும் பொழுது ” வலையில் அவர் பந்து வீசும் பொழுது மக்கள் அவரை உற்சாகப்படுத்த தொடங்கினால் அது அவருக்கு அட்ரிலின் சுரப்பியை அதிகரிக்கிறது. அவர் மேலும் வேகமாக வீசத் தொடங்கி விடுவார். வலைப்பயிற்சியில் நோ பால் என்ற கான்செப்ட் கிடையாது. எனவே அங்கு இயல்பாகவே 22 அடி தொலைவு 18 அடியாக மாறிவிடும். இப்படி இருக்கும் பொழுது அவர் பெயரை மக்கள் வலைப்பயிற்சியின் போது கத்தத் தொடங்கினால், அதற்குப் பிறகு பேட்ஸ்மேனான உங்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்!” என்று தெரிவித்துள்ளார்!

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர் “உம்ரான் மாலிக் வீசும் அதிவேக பந்துகளை நீங்கள் வலைப்பயிற்சியில் சந்தித்து விளையாட ஆரம்பித்து விட்டால், அதற்குப் பிறகு 135 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் வேகப்பந்துகள் உங்களை எந்த ஆச்சரியமும் படுத்தாது இயல்பாக உங்களால் விளையாட முடியும் இதில் இப்படி ஒரு நன்மையும் இருக்கிறது” என்று கூறியுள்ளார்!

ஹைதராபாத் சன் ரைஸர்ஸ் அணிக்கு உலகின் தலைசிறந்த வேகப்பந்துவீச்சாளரான தென்னாப்பிரிக்காவின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் டேல் ஸ்டைன் இருக்கிறார். இன்னொரு பயிற்சியாளராக இந்தியாவின் ராமன் தப்லூ இருக்கிறார். இவர் ஸ்டைன் இம்ரான் மாலிக்குக்கு வழங்கிய ஒரு சுவாரசிய ஆலோசனையை பகிர்ந்து உள்ளார். அதில் அவர் ” நீ பெராரி காரில் பயணம் செய்யப் பிறந்தவன். பியட்டுக்கு மாறிவிடாதே!” என்று ஆலோசனை கூறியிருக்கிறார்!