9 விக்கெட்.. அர்ஜுன் டெண்டுல்கர் அசத்தல் பவுலிங்.. உண்மையான யோக்ராஜ் சிங் வார்த்தை

0
249

இந்தியாவின் ஜாம்பவான் கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் உள்நாட்டில் நடைபெற்று வரும் கேஎஸ்சிஏ இன்விடேஷனல் தொடரில் கோவா அணிக்காக விளையாடி வரும் நிலையில் கர்நாடக ஆணிக்கு எதிராக சிறப்பான முறையில் பந்துவீசி கோவா அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கிறார்.

இவர் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்தடுத்த சீசன்களில் நிறைய போட்டிகளில் விளையாட வாய்ப்பு பெறுவார் என்று எதிர்பார்க்கலாம்.

- Advertisement -

கேஎஸ்சிஏ என அழைக்கப்படும் டாக்டர் திம்மப்பயா நினைவுப் போட்டியில் கர்நாடக மற்றும் கோவா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியில் கர்நாடகா அணி முதல் இன்னிங்ஸில் 36.5 ஓவர்களில் 103 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. இதில் கோவா அணித்தரப்பில் மிகச் சிறப்பாக பந்து வீசிய அர்ஜுன் டெண்டுல்கர் 13 ஓவர்களில் 41 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதில் கோவா அணி தனது முதல் இன்னிங்ஸில் 413 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக கோவா பேட்ஸ்மேன் அபிநவ் 109 ரன்கள் குவித்தார்.

இதில் இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடிய கர்நாடக அணி 30.4 ஓவர்களில் 121 ரன்கள் மட்டுமே குவித்து 189 ரன்கள் மற்றும் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் இரண்டாவது இன்னிங்சிலும் 13 ஓவர்கள் வீசி 46 ரன்கள் விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார். மொத்தமாக இந்த போட்டியில் 87 ரன்கள் விட்டுக் கொடுத்து ஒன்பது விக்கெட்டுகள் வீழ்த்தி தனது சிறந்த பந்துவீச்சை அர்ஜுன் நிரூபித்து இருக்கிறார்.

- Advertisement -

அர்ஜுன் டெண்டுல்கர் மொத்தமாக மூன்று மூத்த வடிவ ஃபார்மேட்டில் 49 போட்டிகளில் விளையாடி 68 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார். 13 முதல் தரப் போட்டிகளில் விளையாடும் 21 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார். தற்போது இந்த தொடரிலும் சிறப்பாக பந்து வீசி 9 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார். இவருக்கு விரைவில் 25 வயது ஆக இருப்பதால் வரவிருக்கும் முதல் தர சீசனுக்காக தன்னை தயார் படுத்திக் கொண்டிருக்கிறார்.

2023ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அறிமுகமாகி விளையாடி வரும் நிலையில் ஒரு சில போட்டிகளில் மட்டுமே அவருக்கு விளையாட வாய்ப்பு கிடைத்தது. அர்ஜுன் டெண்டுல்கர் மேலும் தனது சொந்த கிரிக்கெட் அகாடமியில் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தையான யோக்ராஜ் சிங்கிடம் பயிற்சி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:இங்கிலாந்து ODI.. 19 வயது வீரரை சேர்த்த ஆஸி.. இந்திய யு19 WC கனவை கலைத்த மஹ்லி பியர்ட்மேன்.. யார் இவர்.?

யோக்ராஜ் சிங் அர்ஜுன் டெண்டுல்கர் பற்றி கூறுகையில் “அர்ஜுன் டெண்டுல்கர் சுரங்கத்திலிருந்து புதிதாக எடுக்கப்பட்ட நிலக்கரி போன்றவர். அவர் திறமையான கைகளுக்குச் செல்லும் போது விலைமதிப்பற்ற கோஹினுர் வைரமாக மாற்ற முடியும். ஆனால் அதே ரத்தினம் இதன் மதிப்பை மதிப்பிட முடியாத ஒருவரின் வசம் விழுந்தால் அதுவே அவரது வீழ்ச்சிக்கும் வழிவகுக்கும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -