இந்திய டெஸ்ட் அணியில் தனக்கு தொடர்ந்து வாய்ப்பு மறுக்கப்படுவது குறித்து இளம் வீரர் சர்ஃபராஸ் கான் வெளிப்படையாகப் பேசியுள்ளார்.
வரவிருக்கும் நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் தனக்கு இடம் கிடைக்காதது குறித்து அவர் தனது ஆதங்கத்தைப் பகிர்ந்துள்ளார்.
உள்நாட்டுத் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து ரன்களைக் குவித்த போதிலும், தேசிய அணியில் தனது பெயர் விடுபடுவது குறித்து அவர் மனம் திறந்துள்ளார்..
அணியின் தேர்வுக் குழு தனக்கு எந்தவிதமான அதிகாரப்பூர்வ விளக்கத்தையும் நேரடியாக அளிக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார்.
இந்தச் சூழல் குறித்து சர்ஃபராஸ் கான் பேசும்போது “தேர்வுக் குழுவினர் இதை என்னிடம் நேரடியாகக் கூறவில்லை. நான் இங்கிலாந்துக்குச் சென்றபோது ரன்களைக் குவித்தேன். அதனால் சில சமயங்களில், நீங்கள் அணிக்குத் திரும்பி உள்நாட்டுத் கிரிக்கெட்டில் ரன் அடித்த பிறகு, இந்தியாவில் கடுமையான ரேங்க் டர்னர் ஆடுகளங்களில் விளையாடும்போது திடீரென சிறப்பாகச் செயல்பட முடியாமல் போகலாம்” என கூறி இருக்கிறார்.
தொடர்ந்து அவர் மேலும் பேசும்போது “அல்லது நீங்கள் சிறப்பாக விளையாடினால், அந்த மாதிரியான விக்கெட்டுகளில் 30-40-50 ரன்களே போதுமானது. ஆனால் நான் வெளிநாடுகளில் ரன்கள் அடிக்கவில்லை என்று அர்த்தமில்லை. நான் வெளிநாடுகளிலும் ரன்களைக் குவித்துள்ளேன். அதனால் பரவாயில்லை. அது அவர்களின் பார்வை. விளையாடுவது மட்டுமே என் வேலை, அதை நான் தொடர்ந்து செய்வேன்” என கூறி இருக்கிறார்.






