இங்கிலாந்து ODI.. 19 வயது வீரரை சேர்த்த ஆஸி.. இந்திய யு19 WC கனவை கலைத்த மஹ்லி பியர்ட்மேன்.. யார் இவர்.?

0
1302

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடரில் விளையாடியிருக்கும் நிலையில் அதற்கு அடுத்ததாக 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் களமிறங்க இருக்கிறது.

இதற்கான ஆஸ்திரேலிய அணி தற்போது அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில் புதிய வரவாக 19 வயதான வேகப்பந்து வீச்சாளர் மாஹ்லி பேர்டுமேன் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடருக்காக சேர்க்கப்பட்டிருக்கிறார்.

- Advertisement -

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிக்கு அடுத்தடுத்து முக்கிய தொடர்கள் நடைபெற இருப்பதால் அதற்கு தகுந்தவாறு வீரர்களை தயார்படுத்தி வருகிறது. இதில் வருகிற நவம்பர் மாதம் நடைபெற இருக்கிற இந்திய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபி தொடருக்காக முன்னணி வீரர்கள் தற்போது ஓய்வு பெற்று வருகின்றனர். இந்த சூழ்நிலையில் தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வரும் டி20 கிரிக்கெட் தொடர் இரண்டு அணிகளுக்கும் வெற்றி தோல்வியின்றி தொடரானது டிராவில் முடிவடைந்திருக்கும் நிலையில் அதற்கு அடுத்ததாக 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாட உள்ளது.

தரமான வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எப்போதுமே குறைவில்லாத ஆஸ்திரேலியா அணியில் சில வீரர்கள் காயம் காரணமாக வெளியேறி இருப்பதை தொடர்ந்து பேட் கம்மின்ஸ் மற்றும் ஹேஸில்வுட் போன்ற முன்னணி வீரர்கள் இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக ஓய்வு பெற்று வருகின்றனர். இந்த சூழ்நிலையில் ஸ்டார்க் மற்றும் சீன் அப்போட் ஆகியோர் முக்கிய வேகப் பந்துவீச்சாளர்களாக இருக்கும் நிலையில் இவர்களோடு ரிசர்வ் பிளேயராக 19 வயதான மேற்கு ஆஸ்திரேலியாவை சேர்ந்த மாஹ்லி பேர்டுமேன் இந்த தொடரில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.

- Advertisement -

மாஹ்லியின் கிரிக்கெட் வாழ்க்கையை பொருத்தவரை ஒரு லிஸ்ட் ஏ போட்டியில் மட்டும் விளையாடி இருக்கும் நிலையில் ஒரு விக்கெட் வீழ்த்தி இருக்கிறார். இவர் அண்டர் 19 உலகக் கோப்பை அணியில் ஆஸ்திரேலியா அணிக்காக பிப்ரவரி மாதம் நடைபெற்ற இந்திய அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் 15 ரன்கள் விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார்.

பிப்ரவரி மாதத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற ஒரு போட்டியில் ஒரு விக்கெட்டும் ஜனவரி மாதத்தில் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக பந்துவீசி இரண்டு விக்கெட்களும் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒரு போட்டியில் 7 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளும் வீழ்த்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:தோனி விராட்.. 2 பேரும் லெஜெண்டாக காரணம்.. இந்த ஒரே மந்திரம்தான்.. சிலிர்த்து போனேன் – துருவ் ஜுரல் பேட்டி

ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ள நிலையில் இவருக்கு ஏதேனும் ஒரு போட்டியில் ஆவது வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொடரில் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் இவருக்கு ஆஸ்திரேலியா அணியில் மிகப்பெரிய எதிர்காலம் காத்திருக்கிறது எனவும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படும் விஷயமாகும்.

- Advertisement -