இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன்கள் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரது பேட்டிங் பிரச்சனைகளை ஆஸ்திரேலியா அணி கண்டுபிடித்து விட்டதாக கிளன் மெக்ராத் கூறியிருக்கிறார்
இந்திய அணி தற்போது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் மற்றும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்கு ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப் பயணம் செய்திருக்கிறது.
இந்திய அணியின் பிரச்சனை
ஆஸ்திரேலிய தொடருக்கு முன்பாக இந்திய டெஸ்ட் அணியில் இல்லாத சில வீரர்கள் முன்கூட்டியே ஆஸ்திரேலியாவிற்கு சென்று பயிற்சியை ஆரம்பிக்கவில்லை. மேலும் முதல் போட்டி நடைபெற்ற பெர்த் மைதான சூழ்நிலை பந்துவீச்சுக்கு மிக சாதகமாக இருந்ததும் பிரச்சனையாக அமைந்தது.
ஆஸ்திரேலியா ஒருநாள் தொடருக்கு விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா திரும்பி வந்ததால் அதிகபட்ச எதிர்பார்ப்புகள் இரு நாட்டு ரசிகர்களிடையேயும் இருந்தது. இதன் காரணமாக டிக்கெட் விற்பனை அமோகமாக அமைந்தது. ஆனால் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா சீக்கிரத்தில் ஆட்டம் இழந்தது ஏமாற்றமாக அமைந்தது.
நாங்கள் கண்டுபிடித்து விட்டோம்
இந்த நிலையில் பெர்த் ஆடுகளத்தில் இருந்த அதிகபட்ச வேகம் மற்றும் பவுன்ஸ் இந்திய பேட்ஸ்மேன்களை நிலை குலைய வைத்தது. விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவின் பலவீனத்தை ஆஸ்திரேலியா அணி கண்டுபிடித்து விட்டதாக ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் கிளன் மெக்ராத் கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க : ஆஸி 2வது ODI.. உத்தேச இந்திய பிளேயிங் XI.. முக்கிய மாற்றம் நடக்குமா.. தொடரை இழப்போமா? – முழு அலசல்
இதுகுறித்து கிளன் மெக்ராத் கூறும்பொழுது “முதல் போட்டிக்கு முன்பாக ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி பற்றி நிறைய பேச்சுகள் இருந்தது. ரசிகர்கள் நிறைய எதிர்பார்ப்புகளை வைத்திருந்தார்கள். ஆனால் அவர்கள் இருவரும் நிறைய கிரிக்கெட் விளையாடிவிட்டு இங்கு வரவில்லை. இந்தியாவில் அவர்கள் பழகியதை விட கொஞ்சம் அதிக வேகம் மற்றும் பவுன்ஸ் கொண்ட எங்களது ஆடுகளத்தில் அவர்கள் இருவருமே வெளிப்பட்டு விட்டார்கள். அவர்களது பிரச்சனை மற்றும் பலவீனத்தை நாங்கள் கண்டறிந்து விட்டோம்” என்று கூறி இருக்கிறார்.






