ஆஸி 2வது ODI.. உத்தேச இந்திய பிளேயிங் XI.. முக்கிய மாற்றம் நடக்குமா.. தொடரை இழப்போமா? – முழு அலசல்

0
343
ICT

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நாளை அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற இருக்கும் இரண்டாவது ஒருநாள் போட்டிக்கு இந்திய பிளேயிங் லெவன் எவ்வாறு அமையும்? என பார்க்கலாம்.

தற்போது இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியாவில் அந்த அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. இந்த தொடரில் பெர்த் மைதானத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி எளிதாக ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வி அடைந்தது. எனவே இரண்டாவது ஒருநாள் போட்டியில் வென்று தொடரை தற்காலிக சமன் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

- Advertisement -

விராட் ரோஹித் ரன் குவிப்பார்களா?

தற்போது மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்பி வந்திருக்கும் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா முதல் ஒருநாள் போட்டியில் ரன்கள் எடுக்கவில்லை. மேலும் 2027 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கு அவர்கள் திரும்பி வருவதற்கு நம்பிக்கையை கொடுக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.

இந்த நிலையில் முதல் போட்டியில் மைதான நிலவரம் பந்து வீச்சுக்கு சாதகமான வானிலை கொண்டிருந்தது. மேலும் பெர்த் மைதானத்தில் ஆடுகளம் நல்ல பவுன்ஸ் உடன் காணப்பட்டது. இதன் காரணமாக இந்திய பேட்ஸ்மேன்களால் எடுத்ததும் சிறந்த துவக்கத்தை கொடுக்க முடியவில்லை. எனவே இரண்டாவது ஒருநாள் போட்டியில் இருவரும் திரும்பி வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

மாற்றங்களுக்கு வாய்ப்பு உண்டா?

தற்போது இந்திய பிளேயிங் லெவனில் அக்சர் படேல் அல்லது வாஷிங்டன் சுந்தர் இருவரில் ஒருவருக்கு பதிலாக குல்தீப் யாதவ் விளையாட வேண்டிய தேவை இருக்கிறது. ஆனால் பேட்டிங் வரிசை 8 வரையில் இருக்க வேண்டும் என்பதால் நிச்சயம் கம்பீர் குல்தீப் யாதவை விளையாட வைக்க மாட்டார் என்று கூறப்படுகிறது.

மேலும் ஹர்ஷித் ராணா இடத்திற்கு உயரமான பிரசித் கிருஷ்ணா கொண்டுவரப்பட வேண்டும் என்று கூறப்படுகிறது. ஆனால் கம்பீர் ஹர்ஷித் ராணா விஷயத்தில் மிகவும் பிடிவாதமாக அவரை தொடர்ந்து வாய்ப்பு கொடுத்து விளையாட வைப்பதால் இதற்கும் வாய்ப்பில்லை என்று கிரிக்கெட் வல்லுனர்கள் கூறுகிறார்கள்.

இதையும் படிங்க : இந்தியா, ஆஸ்திரேலியா ஒருநாள் தொடரால் எந்த பயனும் இல்லை.. டிவி சேனலுக்காக நடத்தப்படுகிறது.. கவாஸ்கர் விமர்சனம்

இந்திய பிளேயிங் XI : கேப்டன் கில், ரோகித் சர்மா, விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல்.ராகுல், அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், நிதீஷ் குமார் ரெட்டி, ஹர்ஷித் ராணா, அர்ஸ்தீப் சிங் மற்றும் முகமது சிராஜ்.

- Advertisement -