அவர் ஒருவர் இருவருக்குச் சமம் – இந்திய வீரர் பற்றி மெக்ராத் புகழ்ச்சி!

0
4362
Glenn McGrath

இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணிக்குக் கபில்தேவிற்குப் பிறகு ஒரு சிறந்த வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் என்றால், அது பரோடாவின் ஹர்திக் பாண்ட்யாதான். மணிக்கு 140 கி.மீ வேகத்தில் பந்து வீசக்கூடியவர் பேட்டிங்கிலும் பவர் ஹிட்டராய் அதிரடியாய் மிரட்டக் கூடியவர்!

2015ஆம் ஆண்டு ஹர்திக் பாண்ட்யாவை மும்பை அணி கண்டுபிடிக்க, அடுத்தடுத்து இவரது சிறப்பான செயல்பாடுகளும், ஒரு வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் பற்றாக்குறையும், மிக எளிதாய் இந்திய அணிக்குள் இவரைக் கொண்டுவந்தது!

- Advertisement -

இந்திய அணியிலும் பேட்டிங், பவுலிங், பீல்டிங் என இவரது பங்களிப்பும் அர்ப்பணிப்பும் 200% அளவில் இருந்தது. ஆனால் முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயம், திடீரென இவரது கிரிக்கெட் எதிர்காலத்தையே கேள்விக்குள்ளாக்கியது. இலண்டனில் இதற்காக அறுவை சிகிச்சை செய்துகொண்டவரை, கடந்த ஆண்டு டி20 உலகக்கோப்பைக்கு அழைத்து வந்தது இந்திய அணி நிர்வாகம். ஆனால் ஹர்திக் பாண்ட்யாவால் பழையபடி களத்தில் சிறப்பாகச் செயல்பட முடியவில்லை. இதனால் அணியில் தன்னைத் தேர்வு செய்யவேண்டாமென்று ஹர்திக் பாண்ட்யாவே கேட்டுக் கொண்டார்!

மிகத் தீவீரமாய் உடற்தகுதியில் கவனம் செலுத்திய ஹர்திக் பாண்ட்யா இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டானாக திரும்பி வந்தார். இந்தத் தொடரில் ஒரு கேப்டனாக, பேட்ஸ்மேனாக, பவுலராக, பீல்டராக என பழைய ஹர்திக் பாண்ட்யாவாக சுழன்றடித்தார். 15 போட்டிகளில் 487 ரன்களையும், எட்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். அணியை இறுதிப்போட்டிக்குக் கொண்டுசென்று, பேட்டிங், பவுலிங் என சிறப்பாகச் செயல்பட்டு ஆட்டநாயகன் விருதையும் பெற்று கோப்பையையும் வென்று கொடுத்தார். இதற்குப் பிறகு இந்திய அணிக்குள் வந்தவரின் செயல்பாடுகளில் பழைய ஹர்திக் பாண்ட்யாவை விட இருமடங்கு செயல் வேகத்தைப் பார்க்க முடிகிறது!

ஹர்திக் பாண்ட்யா பற்றி ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிரிக்கெட் லெஜன்ட் பாஸ்ட் பவுலரான மெக்ராத் புகழ்ந்து கூறியுள்ளார். அதில் அவர் “கிரிக்கெட் என்பது நம்பிக்கை சார்ந்த விளையாட்டு. ஹர்திக் பாண்ட்யா நம்பிக்கையான வீரர். அவர் நன்றாகப் பந்துவீசினால் அது பேட்டிங்கிலும் சிறப்பாகச் செயல்பட வைக்கிறது. ஹர்திக் பாண்ட்யா இரு வீரர்களுக்குச் சமமான வீரர். அவர் ஒரு வசதியான வீரர். அவர் ஒரு நல்ல புத்திசாலி பந்துவீச்சாளர் மற்றும் சக்தி வாய்ந்த ஹிட்டர். அவரிடம் நல்ல விளையாட்டு திட்டங்கள் இருக்கிறது” என்று புகழ்ந்து கூறியிருக்கிறார்!

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர் “நான் மிகவும் பாரம்பரியவாதி. நான் டெஸ்ட் கிரிக்கெட்டை விரும்பினேன். என் ஒருநாள் போட்டிகளையும் விரும்பினேன். டெஸ்ட் கிரிக்கெட் இறுதிவரை தொடரும். அது பாதுகாக்கப்பட்டு இன்னும் உயர்வாக நடத்தப்படும் என்று நம்புகிறேன். ஒருநாள் போட்டிகளைப் பொறுத்தவரை அது உற்சாகமளிக்கக் கூடியதாகவே இருக்கிறது. நல்ல ரன் குவிக்கிறார்கள். ஒருநாள் போட்டிகள் எங்கு செல்கிறது? அது எங்கு செல்கிறது? என்று பார்க்கவும் ஆர்வமாக உள்ளேன். ஒருநாள் போட்டிகளைத் தொடர்ந்து உற்சாகமானதாக வைத்திருக்க வேண்டும். இதில் சில சாவல்கள் உள்ளதை ஏற்கிறேன்” என்றும் தெரிவித்து இருக்கிறார்!