உலக கோப்பை கம்மின்ஸ் விவகாரம்.. யாரும் இப்படி பண்ணி இருக்க மாட்டாங்க.. மௌனம் கலைத்த மேக்ஸ்வெல்

0
9067

ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர வீரரான மேக்ஸ்வெல், உலகக்கோப்பையைக் கம்மின்ஸ் வாங்கிய போது தனக்கு ஏற்பட்ட அனுபவத்தைத் தற்போது பகிர்ந்துள்ளார்.

அகமதாபாத்தில் நடைபெற்ற உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி, இந்திய அணியை வெற்றி பெற்று உலகக் கோப்பையைக் கைப்பற்றியது. இது ஆஸ்திரேலியா அணி வென்றுள்ள ஆறாவது உலகக்கோப்பை ஆகும். உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

- Advertisement -

அகமதாபாத் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் சுமார் ஒன்றரை லட்சம் ரசிகர்கள் முன்னிலையில், ஆஸ்திரேலியா அணி இந்தியாவை வீழ்த்தியது. 30 வயதான கம்மின்ஸ் அவர் வீசிய பத்து ஓவர்களில் ஒரு பவுண்டரி கூட விட்டுக் கொடுக்கவில்லை. இந்தியாவின் முக்கிய விக்கெட்டுகளான விராட் கோலி மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரின் விக்கெட்டையும் வீழ்த்தினார்.

இந்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர வீரரான கிளைன் மேக்ஸ்வெல், பேட் கம்யூனிஸ்ட் குறித்து சில விஷயங்களைப் பகிர்ந்துள்ளார்.
” உலகக்கோப்பை லீக் தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான பேட் கம்மின்ஸ்ன் பேட்டிங் சற்று மந்தமாக இருந்திருக்கும். உண்மையில் பேட் கம்மின்ஸ் பேட்டிங் பாணி அதுவல்ல. அவர் எப்போதும் சுதந்திரமாக விளையாட விரும்புவார். மேலும் பந்தினை அடித்து ஆட முயற்சிப்பார்.

அவரால் எந்த சூழ்நிலையிலும் அணிக்கு தகுந்தமாறு விளையாட முடியும். ஆனால் அப்போட்டியில் அவர் தனது ஈகோவை ஒதுக்கி வைத்துவிட்டு, விக்கெட் தடுப்பாட்டத்தில் முற்றிலும் ஈடுபட்டார். போட்டியின் போது அவர் தியாகம் செய்த காரியங்களுக்கும், எங்களுக்காக அவர் செய்த அனைத்திற்கும், தனிப்பட்ட முறையில் எனக்கும் நான் என்றென்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன்.” என்று கூறினார்.

- Advertisement -

இந்தியப் பிரதமர் மோடி மற்றும் ஆஸ்திரேலியாவின் துணைப் பிரதமர் ரிச்சர்ட் மார்லஸ் ஆகியோர் கோப்பையை கம்மின்ஸிடம் ஒப்படைத்த பிறகு, அவர்கள் அவரது அணி வீரர்களுக்கு வாழ்த்து தெரிவிக்க மேடையில் இருந்து சென்றனர்.

மேலும் இச்சம்பவத்தை நினைவுகூர்ந்த மேக்ஸ்வெல் ” உலகக்கோப்பையை இந்திய பிரதமர் மோடி கையில் கம்மின்ஸ் வாங்கும் வீடியோவை பார்த்தேன். அது மிகவும் வேடிக்கையாக இருந்தது. அங்கு அவர் மோடியின் கையைக் குலுக்கிய பின் மேடையில் தனியாக மாட்டிக் கொண்டார். அது சுமார் பத்து நிமிடங்கள் நீடித்தது போல உணர்ந்தார்.

ஆனால் உண்மையில் அவர் அதை சமாளித்து விதம் பாராட்டுக்குரியது. ஆனால் அவர் அதைப் பற்றி எதுவும் பெரிதாக நினைக்கவில்லை. மேலும் அவர் தனது அணி வீரர்கள் மேடையேறும் வரை மரியாதையுடன் காத்திருப்பார். அவர் செய்ததைப் போல யாரும் கையாண்டிருக்க மாட்டார்கள். என்று கூறினார்.